பொன்னியின் செல்வன் வெளியிட்டு தேதி – விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

0
451
ponniyin
- Advertisement -

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி உள்ளது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல முறை முயற்சி செய்து வந்தார் மணிரத்னம்.

-விளம்பரம்-

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது தன்னுடைய நீண்ட கனவு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அந்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. அதோடு தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக பிரம்மாண்ட செலவில் பொன்னியின் செல்வன் தயாராகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள்:

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ்கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி:

இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், இரண்டாம் பாகத்தில் ஆறு பாடல்களும் என மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான படபிடிப்புகளும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

ரிலீஸ் தேதியுடன் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கார்த்தி, திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் ஆகியோரது கதாபாத்திரம் தோற்றம் உடைய புகைப்படங்களை போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கமெண்டுகளை போட்டு வருகின்றார்கள்.

Advertisement