சமந்தா, பிரபாஸுடன் என்ன தான் பிரச்சனை ? – மனம் திறந்த பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.

0
571
PoojaHegde
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படம் மூலம்’ அறிமுகமானார். இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். பின் இவர் 2014-ஆம் ஆண்டு நடித்த ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது.

-விளம்பரம்-
Arabic Kuthu Solves Rift Btwn Samantha And Pooja Hegde

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இறுதியாக இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் வெளிவந்து மெகா ஹிட்டானது. தற்போது இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பீஸ்ட் படத்தில் பூஜா:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தான் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

Arabic Kuthu Solves Rift Btwn Samantha And Pooja Hegde

பூஜா நடித்த ராதே ஷ்யாம் படம்:

மேலும், இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் சமந்தா, பிரபாஸ் உடன் பூஜா ஹெக்டே சர்ச்சையில் உள்ளார் என்று பல்வேறு வதந்திகள் சோசியல் மீடியாவில் எழுந்து உள்ளது. அதுஎன்னவென்றால், ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் பூஜாவுக்கும், பிரபாஸ்க்கும் சங்கடம் உருவாவதை தடுக்க பட குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரபாஸ்-பூஜா – சமந்தா இடையே சங்கடம்:

கேமராவுக்கு வெளியே நல்ல நட்புடன் இருப்பதால் தான் ஸ்கிரீனில் நல்ல கெமிஸ்ட்ரி வெளிப்படுகிறது. ஆனால், இருவருக்கும் இடையே சங்கடம் இருக்கு என்று கூறுகிறார்கள். அதேபோல் சமந்தாவுக்கும் பூஜாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனி போர் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா,பிரபாஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் இணையத்தளம் ஒன்றிற்கு பூஜா ஹெக்டே பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பாஸிட்டிவ் செய்திகளை விட நெகட்டிவ் செய்திகள் அதிகமாக விற்பனையாகின்றன.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா:

அவை உண்மையாக இல்லாத போதும் மக்கள் அதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கின்றனர். அதனாலேயே என்னுடைய வாழ்க்கையை பாசிட்டிவ் எண்ணங்களால் நிரப்பிக் கொள்கிறேன். என்னுடைய சமூக வலைத்தளங்களில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் பகிர்வதற்கு அது தான் காரணம். ஏற்கனவே நிறைய நெகட்டிவ் கொட்டிக் கிடக்கிறது. அதில் இணைய விரும்பவில்லை. அதனை மறக்கவும் பாசிட்டிவ் கவனம் செலுத்தவும் முயற்சிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி பூஜா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement