இன்னும் 3 நாள் வெளுத்து வாங்க போகுது. எச்சரிக்கும் ஆய்வு நிலை. வேலையை காட்ட ஆரம்பித்த டிசம்பர்.

0
1416
Rain
- Advertisement -

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்து உள்ளார்கள். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. மேலும், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு, கேரளா போன்ற பகுதிகளில் காற்று கிழக்கு நோக்கி வீசுவதால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் கூறி உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்ச தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக கூடும் என்றும் கூறி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Rain

மேலும், சென்னை, மதுரை, கடலூர், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், குமரி போன்ற மாவட்டங்களில் கன மழை பொழிந்து தள்ளி உள்ளது. அதோடு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆகவே கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சார சேவைகள் எல்லாம் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள். மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆளை அடித்துச் செல்லும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. மேலும், குற்றாலம் உள்ளிட்ட பல அருவிகளில் தண்ணீரின் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.

இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமா என்னவானார் ?

- Advertisement -

இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக மழை இரவு பகல் என்று பாராமல் கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், பள்ளி, கல்லூரி என அனைத்தும் விடுமுறை விட்டு உள்ளார்கள். மேலும்,கே.கே நகர், அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பல இடங்களில் மழை அடிச்சு ஊற்றுகிறது. இப்படி பெய்யும் கனமழையால் சாலை எங்கும் வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் டிசம்பர் மாதம் என்றாலே பிரச்சனை தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

Image result for கனமழை எச்சரிக்கை"

-விளம்பரம்-

ஏனென்றால் டிசம்பர் மாதம் தான் பருவநிலையின் உச்சகட்டம் என்று சொல்லலாம். மேலும், டிசம்பர் மாதத்தின் போது தான் பல பேரழிவுகளும், இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுனாமி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், புயல், சூறாவளி போன்ற அனைத்து இயற்கை சீற்றங்களும் இந்த மாதத்தில் தான் அதிகமாக ஏற்படுகின்றது என்ற தகவலும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லோரும் அதிக கவனத்தோடு இருங்கள் என்றும் ரெட் அலார்ட் விடுத்துள்ளார்கள்.

Advertisement