சாப்பாடு போடாமல் ஜட்டியோடு ஒக்கார வெச்சாங்க..!புலம்பிய பவர் ஸ்டார்..!

0
318

தமிழில் லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா,ஐ , கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமடைந்தவர்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்னையிலிருந்து ஊட்டிக்கு கடந்த 5-ந்தேதி கடத்தினார்கள். மேலும்,அவரது மனைவி ஜூலியையும் சிறை வைத்துள்ளனர் கடத்தல் கும்பல்.
அவர்களிடமிருந்து தப்பிய பவர்ஸ்டார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவரது மனைவியும் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவர் ஸ்டார், 
ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலமிடம் ரூ.1.25 கோடி வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன்.இந்நிலையில் எனக்கு பட வாய்ப்பு தருவதாக போன் செய்து என்னை ஓட்டல் அறைக்கு அழைத்தனர்.

அதனை நம்பி சென்ற போது ஆலம் என்பவரிடம் நான் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் எனக்கு டார்ச்சர் கொடுத்தனர்.
என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். ஜட்டியோடு உட்கார வைத்தனர். அன்றைக்கு முழுக்க எனக்கு சாப்பாடு தரவில்லை. 5-ந்தேதி மாலை ஒரு டீ மட்டும் வாங்கிக் கொடுத்தனர்.

6-ந்தேதி காலையில் இரண்டு இட்லியும், இரவு இரண்டு சப்பாத்தியும் மட்டுமே கொடுத்தனர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் என்னைச் சித்ரவதை செய்தனர். அடிக்கவும் செய்தார்கள் என்று புலம்பியுள்ளார் பவர்.