50 வயது நடிகையுடன் காதலா? நடிகர் பிரபாஸ் சீனு கொடுத்த விளக்கம்.

0
1876
- Advertisement -

50 வயது நடிகை உடன் காதல் குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் பிரபாஸ் சீனு கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் துளசி. இவர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன்- அம்பிகா நடித்த சகலகலா வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

பின் இவர் இடையில் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பின் மீண்டும் இவர் படங்களில் அக்கா, அண்ணி, தங்கை போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு இப்போது 50 வயது ஆகிறது. இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

பிரபாஸ் சீனு-துளசி நடத்தும் நிகழ்ச்சி:

அந்த வகையில் துளசி அவர்கள் ஒரு பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் சீனு உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் சீனுவை துளசி அன்போடு டார்லிங் டார்லிங் என்று அழைத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பிரபாஸ் சீனு- துளசி இருவரும் காதலிக்கிறார்கள் என்று சோசியல் மீடியாவில் தேவையில்லாத செய்தியை பரப்பி இருக்கிறார்கள்.

துளசி குறித்த சர்ச்சை:

அதோடு இதற்கு இருவருமே எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் மௌனம் காத்திருந்தார்கள். இதனால் நெட்டிசன்களும் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தி சோசியல் மீடியாவில் தேவையில்லாமல் சர்ச்சை கிளப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் சீனு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், 50 வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

பிரபாஸ் சீனு அளித்த பேட்டி:

துளசி எனக்கு அம்மா போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் என் மீது அக்கறையுடன் நடந்து கொள்வார். இது ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவு. அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை அவர் சந்தித்திருக்கிறார். எங்களை பற்றி பரவிய வதந்தியை என் மனைவியிடம் சொன்னேன். இதைக் கேட்ட அவர் சிரித்தார். என் மனைவி மிகவும் பக்குவமானவர், புரிந்து கொள்ளும் திறன் உடையவர்.

நடிகர் பிரபாஸ் சீனு குறித்த தகவல்:

இது போன்ற வதந்திகளை அவர் காதில் வாங்கிக் கொள்வது கூட இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் பிரபாஸ் சீனு அவர்கள் தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். இவர் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார். இவருடைய நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Advertisement