அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மைக்கல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டிருந்தது.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, பங்காரு அடிகளார், டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மகாதேவன், செஸ் வீராங்கனை ஹரிகா, இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர், அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்தேவ் சிங் உட்பட 56 பேர், குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகளை பெற்றனர்.
இந்த விருது வழங்கும் விழாவிற்க்கு சென்ற பெரும்பாலான நபர்கள் மாடர்ன் உடைகளில் சென்றிருந்தனர். ஆனால், பிரபுதேவா மட்டும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது.