‘முருங்கைக்கீரை அவித்து சாப்பிட்ட காலம் எல்லாம் இருக்கிறது’ பல கஷ்டங்களை கடந்து இன்று சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் யார் தெரியுதா?

0
413
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அந்தோணி தாசன். இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்த இவருக்கு இசையின் மீது தீரா காதல் என்றே சொல்லலாம். இதனால் இவர் பல கச்சேரிகள் செய்து இருக்கிறார். மேலும், தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் இவர் பாடி இருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இவர் கடுமையாக உழைத்தார்.

-விளம்பரம்-

இவருடைய திறமையை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இவருடைய இசைக்கு வாய்ப்பு தந்தார். இவர் முதன்முதலாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியிருந்த சூது கவ்வும் என்ற படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பாண்டியநாடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடி இருந்தார்.

- Advertisement -

அந்தோணி தாசன் திரைப்பயணம்:

தற்போது இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து இருந்தார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அந்தோணி தாசன் பேட்டி:

இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பாடி கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்தோணி தாசன் அவர்கள் தன்னுடைய காதல் மனைவி ரீட்டா குறித்து சொன்னது, எனக்கு வீட்டில் 1008 பிரச்சனைகள் இருந்தது. என்னுடைய அம்மாவும், அப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு என்னை ஊரில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அப்போது என்னுடைய அப்பாயீற்கு கண் தெரியாத காரணத்தால் வீட்டிற்கு வீடு சென்று பிச்சை கேட்டு சாப்பிடுவார்.

-விளம்பரம்-

குடும்ப சூழ்நிலை:

அவரோடு நானும் சாப்பாடு பிச்சை எடுக்க போயிருக்கிறேன். வறுமைக் கொடுமையில் இருக்கும்போது முருங்கைக்கீரை அவித்து சாப்பிட்ட காலம் எல்லாம் இருக்கிறது. எனக்கு திருமணம் ஆகும்போது 16 வயது, அவளுக்கு 15 வயது. நாங்கள் இருவரும் காதலித்து வந்த காரணத்தால் எங்கள் இரண்டு பேரையும் சீக்கிரமாக சேர்த்து வைத்து விட வேண்டும் எண்ணத்தில் அம்மா, அப்பா இருந்தார்கள். காரணம், பஞ்சையும் நெருப்பையும் பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டால் பற்றி எரிந்து விடும் என்று தான் எங்களுக்கு திருமணம் நடந்தது.

காதல் கதை:

இவளை நான் காதலித்துக் கொண்டிருந்தபோது என்னை இவள் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் . இதனால் நான் கோபத்தில் கையெல்லாம் கிழித்து சூடு வைத்துக் கொண்டேன். தற்கொலை கூட முயற்சி செய்தேன். ஆனால், கல்யாணமான பிறகு எங்களுக்குள் சண்டை வரும்போது ஏன்டா இவளை கல்யாணம் பண்ணோம் என்று நினைத்து என்னை நானே குத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், எங்கலுக்குள் காதல் மாறவில்லை என்று கூறி இருந்தார்.

Advertisement