இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் சாதனையயையும் படைத்து இருந்தது.மேலும், படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.
ஆஸ்கர் விருது :
இந்நிலையில் தான் கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார்.
சர்ச்சை :
சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி என தெரிவித்தார். இந்த தகவல் வைரலானது அடுத்து மக்கள் பலரும் ஒரு பக்கம் பாராட்டினாலும் மறுபக்கம் இந்த விருதை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. அதற்கு RRR படக்குழுவும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது.
NAATU NAATU ❤️❤️❤️❤️❤️to the TEAM 🙏 pic.twitter.com/g58cQlubCp
— Prabhudheva (@PDdancing) March 18, 2023
பிரபு தேவா வைரல் வீடியோ :
இருந்த போதிலும் இந்த RRR படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் வென்றதை அடுத்து பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீலிஸ் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிரபு தேவா “நாட்டு நாட்டு” பாடலுக்கு தன்னுடைய நடன குழுவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். மேலும் அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரபு தேவாவின் அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.