அக்ஷய் குமார் படத்தில் விஜய் நடனமாட காரணம் இதுதான் – பிரபு தேவா சொன்ன உண்மை

0
425
Prabhudeva
- Advertisement -

தளபதி விஜய் குறித்து இயக்குனர் பிரபுதேவா அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த தேள் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை. அதன் பின் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பஹிரா. இந்த படமும் பெரிய அளவு வெற்றியடையவில்லை. இதனை அடுத்து முசாசி, எங் மங் சங், ஊமை விழிகள் போன்ற பல படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

- Advertisement -

பிரபு தேவா பேட்டி:

அதுமட்டும் இல்லாமல் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திலும் பிரபு தேவா கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பிரபுதேவா பேட்டி கொடுத்திருந்தார். அப்போது விஜய்- பிரபுதேவா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து போக்கிரி படம் தானே என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார்.

விஜய் குறித்து சொன்னது:

அதற்கு பிரபு தேவா, இல்லை. இது ஹிந்தியில் நான் ஒரு படம் பண்ணபோது எடுத்தது. அப்போது விஜய் படப்பிடிப்பில் இருந்தார். நான் போன் செய்து ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் செய்கிறீர்களா? என்று கேட்டேன். அவர் எதுவுமே சொல்லாமல் பண்ணலாமே என்று சொல்லி வந்து அந்த பாட்டுக்கு நடனமாடி கொடுத்துவிட்டு சென்றார். அந்த படத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ரொம்ப ஸ்வீட் பர்சன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

நடிகர் விஜய் பாலிவுட் படத்தில் நடித்து ஒரு pan இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என்று தான் வேண்டுமென்றே பிரபுதேவாவிடம் கேட்டு இந்தி பாடலால் ஆடியதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் கலகராஜ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. லியோ படம் 12 நாட்களிலேயே 500 கோடிகோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆக மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement