நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா.மதராசப்பட்டிணம் மூலம் இயக்குஞராக அறிமுகமானவர் இயக்குஞர் விஜய். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து இயக்குஞர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார்.
இதையும் படிங்க: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி !
இந்நிலையில் பிரபுதேவா தற்போது `யங் மங் சங்’ மற்றும் `குலேபகாவலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.பிரபுதேவா விரைவில் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குஞர் விஜய் தற்போது சாய் பல்லவியை வைத்து கரு என்ற படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் முடித்த பிறகு இந்த படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




