திறமை சாலிகள் அமுக்கப்படுவது குறித்த அன்றே பேசிய சுஷாந்த்- வீடீயோவை பகிர்ந்த பிரகாஷ் ராஜ்.

0
2836
prakash
- Advertisement -

ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.ல் இவருடைய மரண செய்தியை அறிந்து ரசிகர்களும், பிரபலங்களும் கவலையில் உள்ளார்கள். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழியிலும் ரசிகர்கள் உள்ளார்கள்

-விளம்பரம்-

34 வயதான சுஷாந்த் இறப்பிற்கு காரணம் மன அழுத்தம் தான் என்று கூறப்பட்டது. சுஷாந்த்தின் இறப்பு குறித்து பல்வேறு பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் பிரகாஷ் ராஜ்ஜூம் தன் பங்கிற்கு ட்வீட் செய்துள்ளார். அதில் வாரிசு நடிகர்கள் முறை குறித்து சுஷாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

- Advertisement -

அந்த வீடியோவில் பேசும் சுஷாந்த், நேபோட்டிசம் (வாரிசு அதிகம்) எல்லா இடத்துலயும் இருக்கு. அது எனக்கு நன்றாக தெரியும். அதை ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், திறமை சாலிகளை முன்னுக்கு வரவிடாமல் தவிர்க்கும் போது தான் பிரச்சனை ஏற்படும். அப்போது ஓட்டு மொத்த துறையும் உடையும் என்று கூறியுள்ளார்.

இந்த வீடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், நேபோட்டிசம் , அதோடு நான் வாழ்ந்துள்ளேன். அதிலிருந்து தப்பித்து உள்ளேன்.என்னுடைய காயங்கள் என்னுடைய சதையை விட ஆழமானது ஆனால் இந்த சிறுவன் அதிலிருந்து.ஆனால், இந்த குழந்தையால் (சுஷாந்த்) முடியவில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம் அனைவரும் ஒன்றிணைந்து இது போன்ற கனவுகளை சாகவிடாமல் செய்வோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நேபோட்டிசம் குறித்து கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement