கர்ப்பமாக இருக்கிறேன் சொன்னீங்க. இப்படி பண்ணலாமா ? மைனா பதிவிட்ட வீடியோவிற்கு குவியும் கமன்ட்.

0
18792
myna-second-marriage
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது. மேலும், சமீபத்தில் இதனை மைனா கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகை மைனா கடந்த சில நாட்களாக இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் தான் கற்பமாக இருப்பதையும் மைனா அறிவித்திருந்தார். இந்த நிலையில் மைனா தனது கணவருடன் குத்தம் போட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கும் வேலையில் இப்படி நடனமாடலாமா என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement