‘அவருக்காக நான் நிப்பேன்’ விஜய் குறித்து மனம் திறந்து பேசிய டாப் ஸ்டார் பிரஷாந்த். தற்போது வைரலாகும் வீடியோ.

0
355
Prasanth
- Advertisement -

தளபதி 68 கூட்டணி குறித்து மனம் திறந்து பிரசாந்த் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

- Advertisement -

லியோ படம்:

மேலும், உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் லியோ படத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதி 68 படம்:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது போல இந்த படத்தில் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கும் வழக்கமான நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இறுதியாக இயக்கிய ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

மேலும், தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். படத்தில் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, பிரசாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் பேட்டி தான் வைரலாகி வருகிறது.

பிரசாந்த் பேட்டி;

அதில் அவர், நிறைய படங்களில் நானும் விஜயும் சந்தித்திருக்கிறோம். தெரியாத விஷயங்கள் பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறோம். சினிமா மட்டும் இல்லாமல் பர்சனல் ஆகவும் அவரும் நானும் இணைந்து பல விஷயங்கள் ஷேர் செய்து இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே இன்ட்ஸ்ட்ரி ஒரே குடும்பம். எனக்காக அவர் வந்து நிற்பார், அவருக்காக நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், இது பிரசாந்தின் பழைய பேட்டி வீடியோ. தற்போது தளபதி 68 படத்தின் அறிவிப்புக்கு பிறகு சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement