இதெல்லாம் தேவையில்லாத ஆணி – செய்தியாளர் கேள்வியால் கடுப்பான சித்தார்த்.

0
1113
Siddharth
- Advertisement -

இந்தியாவிற்கு பாரத் பெயர் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இந்தியா- பாரத் பெயர் குறித்த சர்ச்சை தான் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகிய இருவரும் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு நிகழ்ச்சியில் அழைப்பிதழில் பாரத் என அச்சிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதற்கு எதிர்கட்சிகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தியா என்பது பாரத் என்று மாற்றப்பட்டால் உலக அளவில் பெரிய அளவில் விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தியா- பாரத் பெயர் குறித்த சர்ச்சைக்கு பிரபலங்கள் கூட தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

உலக தற்கொலை தடுப்பு தினம்:

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் சித்தார்த் கொடுத்திருக்கும் பதில் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இன்று செப்டம்பர் பத்தாம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்வதை தவிர்ப்பதற்கும், அதை தடுப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றது.

சினேகா தற்கொலை தடுப்பு மையம் :

இதற்காக மாரத்தான் ஓட்டம், வாக்கத்தான் போன்ற பல நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்ற தலைப்பில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று கிலோ மீட்டர் வாக்கத்தான் நடத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை திரைப்பட நடிகர் சித்தார்த் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சித்தார்த் கொடுத்த பதில்:

இதனை அடுத்து சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தற்கொலை தடுப்பு நாள் குறித்து பல விஷயங்களை கூறி இருந்தார். அப்போது அவரிடம் இந்தியா- பாரத் பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சித்தார்த், இந்தியாவில் சென்னையில் நாம் கூடி இருக்கிறோம். எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவையில்லாத ஆணி என்று கூறியிருக்கிறார். தற்போது இவர் கூறியிருக்கும் பதில்தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சித்தார்த் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டக்கர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement