‘விஜயகாந்த் போல வர நினைத்தால்’ – விஜய்க்கு தனது பதிலால் வார்னிங் கொடுத்த பிரேமலதா.

0
1804
- Advertisement -

விஜய்யின் அரசியல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அளித்து இருக்கும் வார்னிங் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

- Advertisement -

விஜயகாந்த் குடும்பம்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 இதனிடையே ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். தற்போது விஜய பிரபாகரன், தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார்.

விஜயகாந்த் உடல் பிரச்சனை:

சமீபகாலமாக விஜயகாந்துக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் அரசியலில் கவனம் செலுத்த முடியாமல் போனது. தற்போது கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒன்று நடத்தி இருந்தார். இந்த கூட்டம் நடைபெற்றது அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிரேமலதா அளித்த பேட்டி:

அப்போது செய்தியாளர்கள் விஜயின் அரசியல் குறித்து பிரேமலதாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், அரசியல் வேறு, சினிமா வேறு. நடிகர் விஜய் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், அவர் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது குறித்து அவர் தான் கூற வேண்டும். அதற்கு முன்பே அதைப்பற்றி பேசுவது சரியானதாக இருக்காது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து விஜயகாந்தின் பாணியை பின்பற்றி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது போல இருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், 40 ஆண்டு காலம் தன்னுடைய வாழ்க்கையை பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த அரசியல் குறித்து சொன்னது:

இனி யார் நினைத்தாலும் அவரை போல வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் அதன் விளைவு மோசமாகத்தான் இருக்கும். காரணம், பிறந்த நாள், கல்வி உதவி, அன்னதானம், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என எல்லாவற்றுக்கும் ஒரு முன்னுதாரணமாக விஜயகாந்த் இருந்தார். அவர் வழியில் மக்களுக்கு நல்லது செய்தால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவரைப் போலவே வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதனால் அதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று எச்சரிக்கை விடும் தோணியில் கூறியிருந்தார்.

Advertisement