அஜித் இனிமேல் இப்படி பண்ண கூடாது – அஜித்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெப்ஸி முக்கிய நபர் கடிதம்.

0
1623
- Advertisement -

தமிழ்நாடு பெப்சி யூனியன் சார்பாக நடிகர் அஜித்திற்கு எழுதி இருக்கும் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது .அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே அஜித் உடைய படங்கள் எல்லாம் வெளி மாநிலங்களில் தான் நடக்கும் என்பது அனைவரும் அறிந்து ஒன்று. இதனால் பெப்சி தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று பெப்சி யூனியன் சார்பில் குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள்.

- Advertisement -

அஜித் குறித்து ஆர் கே செல்வமணி சொன்னது:

இது குறித்து பலமுறை பெப்சி யூனியன் சார்பில் பேட்டியும் அளித்திருந்தார்கள். ஆனால், அஜித் வெளி மாநிலத்திலேயே படபிடிப்பை நடத்தி வருகிறார். இது குறித்து பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி கூறியிருப்பது, நடிகர் அஜித்திற்கு எங்களது கோரிக்கை என்னவென்றால், உங்களுடைய படப்பிடிப்பை இங்கேயே வைக்க வேண்டும் என்பது தான். படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினால் பல தொழிலாளர்கள் உங்களால் பாதிக்கப்படுகிறார்கள். எங்களுக்கும் சண்டை போட தெரியும். ஆனால், 5-6 வருஷமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

சாமிநாதன் அளித்த பேட்டி:

இதனை அடுத்து பெப்சி யூனியன் மாநில பொது செயலாளர் ஆக சாமிநாதன் இருக்கிறார்.
இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர்,
வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து படம் எடுத்தால் 70% இங்கு இருக்கக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இப்போது வடமாநிலத்தில் இருந்து வந்து படம் எடுப்பவர்கள் குறைந்துவிட்டது. 20 வருடத்திற்கு முன்பு தமிழில் ஹிட் படங்களை தெலுங்கில் ரீமேக்ஸ் செய்தார்கள். அப்பொழுது இங்கு வந்து அதிகமாக படபிடிப்பு நடத்தினார்கள். ஆனால், இப்போதெல்லாம் அந்த நிலைமை மாறிவிட்டது.

-விளம்பரம்-

அஜித் குறித்து சொன்னது:

தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் சென்னையில் படபிடிப்பு நடத்தியதால் இங்கு உள்ள நிறைய பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. அதற்காக அட்லீயை நேரில் சந்தித்ததெல்லாம் வாழ்த்து தெரிவித்திருந்தோம். ஜவான் திரைப்படம் 15 நாட்களாக நடைபெற்றது. தினமும் ஆயிரம் பேருக்கு மேல் பணியாற்றி இருந்தார்கள். இந்தி படம் என்றாலே 2000 பேருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். ஆனால், சமீப காலமாக எல்லா நடிகர்களுமே ஹைதராபாத்தில் தான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய நடிகர்கள் பலருக்குமே வேலை வாய்ப்பு குறைந்தது. குறிப்பாக, அஜித் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடித்து வருவதால் இந்த நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. இது குறித்து பல முறை அஜித் இடம் கோரிக்கையாகவே வைத்திருந்தோம்.

அரசாங்கத்திடம் வைத்த கோரிக்கை:

இதனால் தற்போது அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருக்கிறோம். இப்படி இது தொடர்ந்து அஜித் மீண்டும் நடந்தால் கண்டிப்பாக அஜித்திடம் இது குறித்து பேசுவோம். மேலும், பணம் பற்றாக்குறையின் காரணமாக திரைப்பட நகரம் அமைக்க தாமதமாக இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கும். ஆனால்,இடையில் ஆட்சி மாற்றம், கொரோனா போன்ற பல இடையூறுகளால் இந்த வேலை தள்ளிக்கொண்டே செல்கிறது. தற்போது தமிழக முதல்வரிடம் மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர் மந்திரிகளுடன் பரிசீலனை செய்து விரைவில் நல்ல முடிவை கொடுப்பார் என்று நம்புகிறோம்.
அரசாங்கம் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்தால் அதை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக கொடுப்போம். அதோடு விஜய் சேதுபதி இதற்காக 1.35 கோடி ரூபாய் கொடுத்து உதவுகிறார் என்று கூறியிருந்தார்

Advertisement