என் கணவருடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் – பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாடகி.

0
645
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், ‘என்ன கொடுமை சார்’? என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் பிரேம்ஜி மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

முரட்டு சிங்கிள் பிரேம்ஜி :

இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போதும்? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும்.சமீப காலமாகவே பிரேம்ஜி – வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்தது.

பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் ? :

இப்படி இருக்கும் நிலையில் வினைத்தா இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டுஇருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வினைதா, பிரேம்ஜி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்து ‘உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்’ என்று கூறி இருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பிரேம்ஜிக்கும் இவருக்கும் காதல் என்றும் விரைவில் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

பிரேம்ஜிக்கு திருமணமா ?

தற்போது பிரேம்ஜிக்கு 42 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு காலமாக திருமணம் எப்போ? எப்போ? என்று கேட்ட ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருந்தனர். அதோடு பிரேம்ஜி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்டுவந்தனர். பிரேம்ஜி – வினைத்தா பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிந்த நிலையில் இந்த கிசுகிசு குறித்து பேசியுள்ள பாடகி வினைதா இதெல்லாம் வதந்தி பாஸ் என்பது போல அதிர்ச்சியான விளக்கமளித்தார்.

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வினைத்தா :

இந்நிலையில் பிரேம்ஜியை பின்னணி பாடகியான வினைதா கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று மீண்டும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement