ரஜினி இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜெயிலர் படம் தொடர்பாக  திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு கடிதம்.

0
1440
Jailer
- Advertisement -

ஜெயிலர் படம் தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு எழுதியிருக்கும் கடிதம் தற்போது இணையத்தில்வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. கடைசியாக ரஜினி நடித்த படம் “அண்ணாத்த”. அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இதை அடுத்து ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இசை வெளியீட்டு விழா:

அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் எழுதிய கடிதம்:

இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு எழுதியிருக்கும் கடிதம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, ஜெயிலர் படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வெளியிட ரஜினி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னிர் செல்வம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருக்கிறார். இதற்கு ரஜினி தரப்பில் இருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement