சபரி மலை மாலையோடு பெண் பார்க்க சென்ற கேப்டன், திருமண பத்திரிகையில் இருந்த புகைப்படம், கலைஞர் தலைமையால் நடந்த திருமணம்.

0
493
- Advertisement -

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது.

-விளம்பரம்-

விஜயகாந்த் இறந்த பிறகு இன்று தான் கட்சியினரை சந்திப்பதால் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன். இந்த பிரஸ்பஞ்சம் இருக்கும் வரை விஜயகாந்தின் கோவிலாக அவரது நினைவிடம் இருக்கும். அதேபோல் இங்கு அளிக்கப்படும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதே இடத்தில் தொடரும். வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதானம் டிரஸ்ட் என்று விஜயகாந்த் மறைந்த அன்றே ஆரம்பித்து விட்டேன். கேப்டனின்

- Advertisement -

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விஜயகாந்துக்கு மனைவியாக வாழ ஆசைப்படுகிறேன். சூழ்ச்சிகளில் விஜயகாந்த் மாட்டியதால் தான் தேமுதிகவின் பாதை எப்படியோ சென்று விட்டது. தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாக தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று கேப்டன் இருந்து இருந்தால் அவர் இன்று 34வது திருமண நாளை கொண்டாடி இருப்பார்.

34வது திருமண நாள் :

கடந்த ஆண்டு திருமண நாளின் போது கேப்டன் கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் தன்னை பெண் பார்க்க வந்த போது நடந்த சில ஸ்வாரஸ்ய தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் பேசிய அவர் ‘நான் கல்லூரி படிப்பை முடித்த உடனே கேப்டனை திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எங்களுடைய திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட தினம் தான்.

-விளம்பரம்-

விஜயகாந்த் திருமணம்:

என்னை கேப்டன் பெண் பார்க்க வரும் போது தான் நான் அவரை முதல் தடவை பார்த்தேன். காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு, காலில் செருப்பு கூட இல்லாமல் இறங்கி வந்தார். எங்க அம்மா எல்லோருமே எவ்வளவு பெரிய ஹீரோ நம்ம வீட்டுக்கு வருகிறார். அவரை பயங்கரமா வரவேற்கணும் என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், அவர் இறங்கி வந்த விதமே பார்த்து இவர் ஒரு ஹீரோ மாதிரி இல்லை என்று 5 செகண்டிலேயே அவரை எல்லோருக்குமே பிடித்து விட்டது. அப்ப கூட அவர நான் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறேன்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

இப்போ போய் பொண்ணு பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார். அப்போ கேப்டனுக்கு தொடர்ந்து சூட்டிங் இருக்கும். எங்களுக்கு கல்யாணம் முடிந்த ஒரு மூணு நாள் தான் அவருக்கு ரெஸ்ட். எங்களுடைய ஹனிமூன் ஊட்டியில் தான். அதுக்கு கூட சூட்டிங் ஆக தான் போயிருந்தோம். கேப்டன் வெளியில் ஒரு மாதிரி, வீட்டில் ஒரு மாதிரி எல்லாம் கிடையாது. அவருக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் எல்லோருக்கும் சாப்பாடு போடணும். ரொம்ப எளிமையா இருப்பார். எல்லோரிடமும் அன்பாக பழகுவார் பல என்று கூறி இருந்தார்.

Advertisement