என்னுடைய வெற்றிக்கு காரணம் இவர் தான் என்று ஜவான் படத்தின் விழாவில் அட்லீ கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் மெர்சல், பிகில் போன்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
ஷாருக்கான்-அட்லீ படம்:
பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட்சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதோடு இந்தப் படம் எடுக்க ஒரு முக்கியமான காரணம் விஜய் சார் தான் என்று சமீபத்தில் அட்லீ கூறி இருந்தார்.
Vignesh shivan just can't Keep calm After seeing this Video of Atlee &Priya!! pic.twitter.com/EKIf2o9Zm5
— Viral Briyani (@Mysteri13472103) September 5, 2023
இசை வெளியிட்டு விழா:
இந்த படம் இந்த மாதம் வெளியாகயிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் ஷாருக்கான், அட்லி உட்பட படகு குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அட்லி கூறி இருந்தது, என்னுடைய வெற்றிக்கு காரணமான நபர் ப்ரியா தான். ஒரு முறை நாங்கள் LAக்கு சென்றிருந்தோம். அப்போது பிரியாவிற்கு உடம்பு சரியில்லை. உடனே நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது தான் பிரியா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அட்லீ எமோஷனல் பேட்டி:
என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம். எட்டு வருடங்கள் கழித்து எங்களுக்கு கிடைத்த வரம். அடுத்த நாள் சென்னைக்கு திரும்ப வேண்டும். ஆனால், மருத்துவர் பிரியாவை 90 நாட்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார். நானும் இந்த சமயத்தில் பிரியாவுடன் இருக்க முடிவு செய்தேன். எங்களுக்கு திருமணம் ஆகி இந்த எட்டு வருடத்தில் ஒரு நாள் கூட நான் பிரியாவை விட்டு பிரிந்தது கிடையாது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ஷாருக்கான் சாரிடம் இந்த தகவலை சொன்னேன். அவரும் ஒன்னும் பிரச்சினை இல்லை. படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் , பிரியா நான் ஒன்பது மாதம்தான் சுமக்கிறேன்.
ப்ரியா குறித்து சொன்னது:
நீ மூன்று வருடமாக சுமந்து கொண்டிருக்கிறாய். படப்பிடிப்புக்கு நீங்கள் சென்னை கிளம்புங்கள். அடிக்கடி வந்து என்னை பாருங்கள் என்று சொன்னார். அவர் கொடுத்த அந்த தைரியமும் மனநம்பிக்கையும் தான் நான் இந்த படத்தை படத்தை எடுப்பதற்கு காரணம். அதே போல் முதல் முறை நான் என் குழந்தையின் இதயத்தொடுப்பை போனில் தான் கேட்டேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நான் ஒவ்வொரு முறையும் சோர்ந்து விழும் போதும், என்னை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் எனக்கு உறுதுணையாக என்னை ஊக்கப்படுத்தி இருந்தது ப்ரியா தான். அவர் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.