அப்பாவை பார்த்தே இத்தனை நாள் ஆகிறது. உருக்கமான வீடியோ வெளியிட்ட சல்மான் கான் பிரதர்ஸ்.

0
1231
salmankhan
- Advertisement -

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் பலியாகியும் உள்ளனர். உயிரை கொன்று வரும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
salman khan

- Advertisement -

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : என்ன தைரியம் இருந்த என்ன அப்படி சொல்லுவ. ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான ஜூலி.

அதில் நடிகர் சல்மான் கான் அவர்கள் அவரது இளைய சகோதரனின் மகன் நிர்வான் உடன் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் முதலில் சல்மான் கான் அவர்கள் கூறி இருப்பது, நாங்கள் இங்கு சில நாட்கள் இருக்கலாம் என்று வந்தோம். ஆனால், இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதால் நாங்கள் இங்கே மாற்றிக் கொண்டோம்.

-விளம்பரம்-

மிகவும் பயமாக இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை என்று கூறினார். இவரை தொடர்ந்து சல்மான் கானின் இளைய சகோதரனின் மகன் நிர்வான் கூறியது, நான் எனது அப்பாவை பார்த்து மூன்று வாரங்கள் ஆகி விட்டது. நாங்கள் இங்கிருக்கிறோம். என் அப்பா வீட்டில் தனியாக இருக்கிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் சல்மான் கூறியது,

‘பயந்த ஒருவன் தான் இறந்து போனான்’. உனக்கு இந்த திரைப்பட வசனம் நினைவிருக்கிறதா?? அந்த வசனம் இந்த தருணத்திற்குப் பொருந்தாது. உண்மையாலுமே நாங்கள் பயத்தில் இருக்கிறோம். அதை நாங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால், நீங்கள் இந்த தருணத்தில் துணிச்சலைக் காட்டாதீர்கள். நீங்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டுமே தவிர துணிச்சல் உடன் இல்லை.

இதையும் பாருங்க : கழிவறை கூட இல்லாத கிராமத்தில் சிக்கி தவித்துவரும் சீரியல் நடிகை. அவரே வெளியிட்ட வீடியோ.

பொதுவாகவே அச்சப்பட்டவன் தான் பிரச்சனையில் இருந்து தானும் தப்பித்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாத்துவான். இது தான் கதையின் நீதி. அதனால் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். நீங்களும் அச்சத்தில் இருந்து நாட்டை காப்பாத்துவோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குளேயே இருங்கள் என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் சல்மான் கான். இவர் பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக திகழ்வார். இருப்பினும் இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவர் இந்தி சினிமாவின் மிக புகழ் வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவர் ஆவார் . இவர் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு “பீவி ஹோ தோ ஆம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement