ரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்?- பிரியா பவானி சங்கர் கடும் பதிவு.

0
1418
priya
- Advertisement -

உலகம் முழுதும் தற்போது கொரோனா வைரஸ் என்ற நோயால் ஸ்தம்பித்து போயுள்ளது. பல நாடுகளை போல இந்தியிலும் கொரோனா நோயின் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் பல மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சொந்த் ஊருக்கு செல்ல புலம்பெயர் தொழிலாளர்கள் படும் அவலங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் கூட பீகாரில் உள்ள ரயில் நிலையத்தில் பசி மற்றும் அதிக வெப்பத்தால் உயிரிழந்த தாயை விளையாடுவதற்காக எழுப்பும் சின்னஞ்சிறு குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி பலர் மனதயும் கவலையடையச்செய்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

அந்த குழந்தையின் முகம்! இனி கொரோனாவோடு வாழ நாம் பழகிக்குவோம். சரி! இந்த குழந்தையின் முகம் நமக்குள்ளே தரும் குற்ற உணர்ச்சியும் பழகிடுமா? இந்த நவீன உலகத்தில் சீக்கிரமே மருந்தோ, vaccination கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. ஆனால் நடந்து தேயும் தொழிலாளியின் கண்ணீர் கறையை எதை கொண்டும் மறைக்க முடியாது. “அவங்கள யாரு தண்டவாளத்துல படுக்க சொன்னது?” “பேசிகிட்டு இருக்காம மூட்டை முடிச்சிய தூக்கிட்டு நடக்க உதவுங்க” போன்ற அதிகார குரல்கள் நம் நிதர்சனத்தை காட்டிக்கொண்டே இருக்கும். பால்கனி கைதட்டல்களும், ஹெலிகாப்டர் பூ மழையும் எதுக்கு? தனித்து தெருவில் விடப்பட்டவர்களுக்கு வேடிக்கையா? தனித்து விடப்பட்ட ஒரு மாபொரும் கூட்டத்தின் கண்ணீருக்கும் ரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்? அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை -குறள் அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள் Cartoon by @sardhaart

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவ பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். மேலும், புலம்பெயர் தோழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஆவண செய்யுமாறும் அரசுக்கு கோரிக்கை கூட வலுத்து வந்தது. இந்த நிலையில் பீகாரில் பசியால் உயிரிழந்த தாய் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதில், அந்த குழந்தையின் முகம்! இனி கொரோனாவோடு வாழ நாம் பழகிக்குவோம். சரி! இந்த குழந்தையின் முகம் நமக்குள்ளே தரும் குற்ற உணர்ச்சியும் பழகிடுமா? இந்த நவீன உலகத்தில் சீக்கிரமே மருந்தோ, vaccination கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. ஆனால் நடந்து தேயும் தொழிலாளியின் கண்ணீர் கறையை எதை கொண்டும் மறைக்க முடியாது. “அவங்கள யாரு தண்டவாளத்துல படுக்க சொன்னது?” “பேசிகிட்டு இருக்காம மூட்டை முடிச்சிய தூக்கிட்டு நடக்க உதவுங்க” போன்ற அதிகார குரல்கள் நம் நிதர்சனத்தை காட்டிக்கொண்டே இருக்கும்.

பால்கனி கைதட்டல்களும், ஹெலிகாப்டர் பூ மழையும் எதுக்கு? தனித்து தெருவில் விடப்பட்டவர்களுக்கு வேடிக்கையா? தனித்து விடப்பட்ட ஒரு மாபொரும் கூட்டத்தின் கண்ணீருக்கும் ரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்? அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை -குறள். அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள். அதே போல சமீபத்தில் பிரியா பவானி சங்கரின் கருத்தை மறுத்து பெண் ஒருவர் கமன்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிரியா பவானி சங்கரும் பதில் அளித்திருந்தார். ஆனால், பிரியா பவானி சங்கரின் ரசிகர்கள் அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்க துவங்கினர். இதுகுறித்து கமன்ட் செய்த பிரியா பவானி சங்கர், சமீபத்தில் ஒரு பெண் நான் கூறிய கருத்திற்கு அவருடைய கருத்தை கூறி இருந்தால் அதற்கு நான் நாகரீகமான முறையில் பதிலளித்தேன். ஆனால் அந்த பெண்ணை யாரும் மோசமான மொழிகளில் பேச வேண்டாம் என்பதை நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement