இந்தியாவில் கொரோனாவினால் 5734 பேர் பாதிக்கப்பட்டும், 166 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 மோடி 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
முதலில் மோடி அவர்கள் மருத்துவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை அன்று கைதட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் சோசியல் மீடியாவில் இருந்து வந்தது. இதேபோல் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அனைவரின் வீட்டிலும் 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனால் பலரும் பல்புகளை அணைத்து விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். அதிலும் ஒரு சில பேர் பட்டாசுகளை வெடித்து திருவிழா போன்று கொண்டாடினார்கள். இந்நிலையில் மோடி அவர்கள் சொன்னதை எதிர்த்து புறக்கணிக்கும் வகையிலும் சில பிரபலங்கள் தங்களது பதிவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள். வழக்கமாகவே பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம் காமெடி, கிண்டல் செய்வதற்கே என்று ஒரு கும்பல் இருக்கிறது.
அந்த வகையில் விளக்கை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி அறிவித்த உடனே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பயங்கரமான கமெண்டுகளை போட்டு வந்து இருந்தார்கள். அதில் இணையத்தில் மிகப்பிரபலமானது கவுண்டமணி, செந்தில் காமெடி வீடியோ தான். அந்த காட்சியில் நடிகர் மகேந்திரன் தன்னுடைய சிறு வயதில் இருக்கும்போது நடித்திருப்பார்.
இந்த வீடியோவை பார்த்த நடிகர் மகேந்திரன் அவர்கள் ‘நாம செய்தியில் வர அளவுக்கு ட்ரெண்டாகி இருக்கிறோம்’ என்று கூறியிருந்தார். அதனை பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் ‘நீங்கள் ஒரு இலுமினாட்டி’ என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது மகேந்திரன் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகையாக வளர்ந்து இருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக தான் தனது கேரியரை துவங்கி தற்போது முன்னனி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். இவர் பொம்மை, களத்தில் சந்திப்போம், விக்ரம் 58வது படம், கசடதபற, குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் கமிட்டாகி படு பிஸியாக உள்ளார்.