சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் புகாரில் சிக்கி சர்ச்சைக்குரிய நபராக பெயரெடுத்தவர் சுவாமி நித்யானந்தா. ரஞ்சிதாவின் சர்ச்சைக்கு பின்னர் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இவருக்கான பக்தர்ககள் இருக்கத்தான் செய்கின்றனர்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்கொண்டிருந்தலும் பரம ஹம்ச நித்யானதாவின் வாழ்க்கை மட்டும் சந்தோசமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இத்தனை காலம் ஆன்மிக சிந்தனைகளை மாட்டும் தனது பக்தர்களுக்கு அள்ளி வழங்கி வந்த நித்யானந்தா சமீபத்தில் விஞ்ஞான விதிகளையும் கூறிவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஒரு ஆன்மிக சொற்பொழிவில் பேசிய நித்யானந்தா இந்த உலகம் என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி இருந்தார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் பலரும் கிண்டல் செய்து வர, சமீபத்தில் நித்யானந்தா பேசியதை பிரபல சீரியல் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த அந்த வீடியோ பதிவு.