“சிம்டங்காரன்”அப்டின்னா என்ன? பாடலாசிரியர் விவேக் விளக்கம்

0
397
Sarkar

இயக்குனர் யர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் ஒன்று இன்று வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்கரன்” என்ற ஒரு பாடலை மட்டும் இன்று வெளியிட உள்ளது சன் குழுமும்.

இன்று மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “சிம்ட்டாங்கரன்” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சிலர் sun nxt app தங்களது தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள சர்கார் படத்தின் அணைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். இதனால் இந்த படத்தின் இசை வெளியிட்டு அறிவிப்பு வெளியான நாளில் இருந்ததே விவேக்கிடம் இந்த படத்தின் பாடல் குறித்து அடிக்கடி வினாவி வந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியாக இருக்கும் “சிம்ட்டாங்கரன்” பாடல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலரும் பாடலாசிரியர் விவேக்கிடம் வினாவியுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த [பாடலின் சிறு தகவலை மட்டும் வெளியிட்டுள்ள விவேக், “சிம்ட்டாங்கரன்” என்றால் கவர்ந்து இழுப்பவன் , பயமற்றவன் ,துடுக்கானவன் என்று அர்த்தம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.