வாடகை தாய் மூலம் பெற்ற தன்னுடைய குழந்தையை முதன் முறையாக காட்டி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் சமீப காலமாகவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வரும் கலாச்சாரம் வாடிக்கையாகி வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்கள் ‘Surrogacy’ (வாடகை தாய்) மூலம் தாயான நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் தாயாகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார்.
Priyanka Chopra and Nick Jonas’ daughter Malti just made her first public appearance! https://t.co/4K52pNqwQv pic.twitter.com/drkRPNAMC1
— People (@people) January 30, 2023
இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா.அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.
பிரியங்கா – நிக் ஜோனஸ் :
மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார்.
இரு முறைப்படி நடைபெற்ற திருமணம் :
பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருந்தார் பிரியங்கா சோப்ரா
வாடகை தாய் மூலம் குழந்தை :
இதுகுறித்து பதிவிட்ட அவர், நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்று உள்ளோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி என்று பதிவிட்டிருந்தார்.இப்படி ஒரு நிலையில் அன்னையர் தினத்தில் தனது மகளின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பிரியங்கா, உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
மகளுக்கு நடந்த சிகிச்சை :
‘கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமான நேரங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. கடந்த நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இறுதியாக வீட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. எங்கள் குழந்தை இறுதியாக வீடு திரும்பியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் எங்க