வலிமை படத்தில் யோகி பாபுவை நோட் பண்ணீங்களா ? இந்த காட்சிய நீக்க முடியல போல. வைரலாகும் புகைப்படம் இதோ.

0
644
yogi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-176-473x1024.jpg

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் வசூல் சாதனை:

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 6.9 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 3.65 லட்சம் தான் வசூல் செய்தது. ஆனால், தற்போது வலிமை படம் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது.

-விளம்பரம்-

நீக்கப்பட்ட யோகி பாபு காட்சிகள் :

மேலும், வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் வலிமை படத்தில் நடித்து இருப்பதாக யோகி பாபு கூறி இருந்ததை அடுத்து அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட வரவில்லை குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து போட்டு வருகிறார்கள். வலிமை படத்தில் தான் நடிப்பது குறித்து யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-175.jpg

யோகி பாபு வரும் காட்சி :

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், படம் வெளியான போது படத்தில் அவருடைய எந்த ஒரு காட்சிகளுமே வரவில்லை. மேலும், அவர் நடித்த காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக ட்ரிம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே நீக்கி உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், படத்தின் ‘வேற மாறி’ பாடலின் யோகி பாபு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement