சரியாக வெடித்ததா ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ‘ – விமர்சனம் இதோ.

0
9864
gundu
- Advertisement -

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, பிக் பாஸ் ரித்திவிகா, முனீஸ்காந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை பா. ரஞ்சித் அவர்கள் நீலம் புரோடக்சன் மூலம் தயாரித்து உள்ளார். மேலும், இதற்கு முன்னதாகவே பா.ரஞ்சித் அவர்கள் பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்தார். இந்த படமும் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். இசையமைப்பாளர் டென்மா ஆவார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இந்தப் படம் இயக்குனர் அதியன் ஆதிரையனின் வாழ்க்கையில் உண்மையாக நடந்த இரண்டு சம்பவங்களை இந்த படத்தின் கதையாக காண்பிக்கிறார். ஒன்று இரும்பு கடையில் வேலை பார்க்கும் நபர். அவரை சுற்றி நடக்கும் விஷயங்கள். இன்னொன்று லாரி ஓட்டுநர் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். இவர்கள் இருவர் வாழ்க்கையில் நடந்ததை இணைத்து வரும் கதை தான் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம். மேலும், அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் லாரி ஓட்டுநராக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இந்நிலையில் ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளிவந்து உள்ள “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படம் வெற்றி அடையுமா?? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம.

இதையும் பாருங்க : பிரியங்கா வழக்கில் 4 பேரை என்கௌண்டர் செய்த இந்த சாஜ்னார் யார் தெரியுமா ? கேட்டா ஆடி போயிடுவீங்க.

கதைக்களம்:

-விளம்பரம்-

இரும்பு கடையில் லாரி ஓட்டுனராக வேலை பார்ப்பவர் தினேஷ். நடிகை கயல் ஆனந்தி டீச்சர் ஆகப் பணி புரிபவர். பின் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், ஆனந்தி வீட்டில் ஜாதி, மதம் பிரச்சனை காரணமாக இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த ஜாதி, மதம் பிரச்சினையை விட ஒரு பெரிய பிரச்சனை இவர்கள் வாழ்க்கையில் எழுகிறது. அது என்னவென்றால் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டுகளில் இருந்து சில குண்டுகள் மீதம் உள்ளது. மேலும், மிஞ்சிய குண்டுகளில் ஒன்று மட்டும் கரை ஒதுங்கி எப்படியோ இவர்களுடைய கடைக்கு வந்து சேர்கிறது. இரண்டாம் உலகப் போர் போது நாட்டில் பல உயிர்கள் அநியாயமாக போனது. அதை தவிர்க்கும் வகையிலும், இந்த குண்டினால் ஏற்படும் ஆபத்தை தெரியப்படுத்தும் வகையிலும் இந்த கதை அம்சம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்கள் அழுக்கு லுங்கியை போட்டுக் கொண்டு ஒரு கையில் குண்டு பாதுகாக்கவும், இன்னொரு பக்கம் காதலியை தேடுவது என பதட்டமான சூழ்நிலையில் நடித்து உள்ளார். பொதுவாகவே ஆனந்தி எப்போதுமே படத்தில் டிராவலிங் காட்சிகளிலேயே உள்ளார். மேலும், அவர் நடித்த எல்லா படத்திலும் பயணம் செய்துகொண்டே உள்ளார். கடைசியில் ஆனந்தி தன் பெற்றோர்களுடன் போராடி தினேஷ் கரம் பிடிக்கிறாரா? என்பது தான் வேற லெவல். மேலும், இந்த படம் காமெடி, ரொமாண்டிக், திரில்லிங் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த குண்டை கைப்பற்ற அரசாங்கம் ஒரு பக்கம் பாடுபடுகிறது. அதோடு இந்த குண்டை கண்டுபிடித்து மக்களின் முன் இதனுடைய ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கம் போராடுகிறார்கள். கடைசியில் அந்த குண்டு தினேஷ் கையில் தான் கிடைக்கிறது. பின் நாட்டை அழிக்கும் குண்டைப் பாதுகாப்பதா? இல்லை தன் காதலியை கைப்பிடிப்பதா? என்று பல குழப்பத்தில் நடிகர் தினேஷ் பந்தாடுகிறார். கையில் கிடைக்கிறது? குண்டு வெடித்ததா? இல்லையா? இதில் ஆனந்தி, தினேஷ் காதலில் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் மனிதர்கள் எவ்வளவு பேர் செத்துப் போனாலும் கவலையில்லை.

ஆனால், இந்த மாதிரியான(இந்தியா) ஒரு ரகசிய விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கும் அரசாங்கம்; எவன் செத்தாலும், பிழைத்தாலும் கவலை இல்லாமல் ஜாதி,,மதம் தான் முக்கியம் என்று நினைக்கிற ஒரு கும்பல் என இதை அழகாக படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. மேலும், எங்கே செல்ல வேண்டிய குண்டு இந்தியாவிற்குள் எப்படி வந்து சேர்ந்தது. இதை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தவர்களுக்கு என்ன பயன் என்று அருமையாக இந்திய நாட்டிற்கு வெளிப்புறம் நடக்கும் பிரச்சினைகளையும் ,நாட்டை பாதுகாக்கும் வழிகளையும் அப்லாஸ் அளவுக்கு அமைந்துள்ளார் இயக்குனர்.

பிளஸ் :

இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் அழகாக நடித்துள்ளார்கள்

டென்மா இசை பின்னணி ஒவ்வொன்றும் மிரட்டலாக உள்ளது.

இந்திய நாட்டிற்கு ஒரு பிரச்சினை வந்தால் அதற்காக போராடும் விதத்தை அழகாக காண்பித்துள்ளார்.

படத்தின் வசனங்கள், ஒளிப்பதிவு எல்லாமே கிளாப்ஸ் கொடுக்கக் கூடிய அளவிற்கு உள்ளது.

மேலும், கூத்து கலைகள் மூலம் முதலாளிகளின் ஆதிக்கத்தை காட்டிக் கொடுத்தது வேற லெவல்.

இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகளையும், வெளியே பிரச்சினையை ஏற்படுத்தும் சூழ்ச்சம்மா வாதிகளையும் குறித்து அழகாக எடுத்துள்ளார்.

மைனஸ்:

படத்தின் தலைப்புக்கும் இவர்களுடைய ரொமான்ஸுக்கும் சம்பந்தமே இல்லை.

ஒரு குண்டு மையமாக வைத்து கதையை இவ்வளவு தூரம் இழுத்து இருக்க வேண்டாம் எனவும் கூறி இருக்கிறார்கள்.

பட அலசல்:

கடைசியில் குண்டு வெடித்ததா? இல்லையா என்பதை விட இயக்குனரின் கருத்துப் புரட்சிகளை அழுத்தமாக மக்கள் மனதில் விதைத்து உள்ளார். மொத்தத்தில் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு– மக்கள் மத்தியில் பூகம்பம் வெடிக்கும் அளவுக்கு புரட்சி படைக்கு ஒரு வழி காட்டி உள்ளார்”.

Advertisement