நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியின் பாதயாத்திரையின் போது ஆசையாக வந்து மனு அளித்த பெண். சிறிது நேரத்திலே நடுரோட்டில் போட்டுவிட்டு வென்ற அவலம் நடைபெற்றது. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று மதுரையில் மேலூரில் யாத்திரை நடைபெற்று வருகிறது.
பாதயாத்திரை:
தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.
பாதயாத்திரைக்கு இடையில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடியை மூன்றாவது முறை பிரதமரக்குவோம் என்றும் கூறினார். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி . வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.
மனு அளித்த பெண்
நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் பாதயாத்திரையை தொடர்ந்தார் அண்ணாமலை. அவரோடு தொடர்ந்து வந்த பாஜகவினர் மக்களை பார்த்தவுடன் சாலைகளில் உள்ள குப்பைகளை எடுத்து ஒரு பையில் சேகரித்து வந்தனர்.
அப்போது அண்ணாமலையிடம் மனு அளிக்க திருப்பத்தூர் தாய் வீடு மகளிர் குழுவை சேர்ந்த ரமா பெண் மகளிர் குழுவில் நடைபெறும் பிரச்சனைகளை குறித்தும்ம் தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன் தொகையை கட்டுவதற்கு வழியில்லாமல் இருக்கிறோம் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு சிறிது நேரத்தில் சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.