விஜய்யிடம் போராட்ட குணமே இல்லை- விஜய்யின் அரசியல் குறித்து தயாரிப்பாளர் கே ராஜனின் பளிச் பதில்

0
1508
- Advertisement -

விஜய்யின் அரசியல் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. பின் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும், அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பேசி இருக்கிறார். மேலும், நடிகர் விஜயின் இந்த செயலை குறித்து பலரும் பாராட்டி இருந்தார்கள். சிலர் விமர்சித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் கே ராஜன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருந்தது, நடிகர் விஜய் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி இருந்தது அனைவரும் அறிந்ததே. முதல் மதிப்பெண் பெற்ற பெண்ணிற்கு வைர நெக்லஸ் வழங்கியிருக்கிறார். இது சிறப்பான விஷயம் தான். இதில் ஒரு அரசியல் இருக்கிறதா? இல்லையா? என்றால் இருக்கிறது. காரணம், 235 தொகுதியில் இருந்து மூன்று மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தால் இந்த மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்த தொகுதியில் பரவும். தொகுதி என்றாலே அரசியல் ஆகிவிடும். பின் அவர் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி படியுங்கள் என்றார். மிகப்பெரிய தலைவர்களை மட்டுமல்ல அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதாவை கூட படிக்க வேண்டும். அதை அவாய்ட் பண்ணி இருக்கிறார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

ஓட்டு போட உங்க அப்பா அம்மா பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியலா? இல்லையா? நாளைக்கு நான் வந்தால் என்னிடம் ஓட்டு போட காசு வாங்க வேண்டாம் என்று தான் அவர் மறைமுகமாக சொல்கிறார். இது எதிர்கால அரசியலுக்கான அடித்தான். இருந்தாலும், நிச்சயம் விஜய் பக்குவப்படவில்லை. உதாரணம், அவர் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து டயலாக் பேசுவார். இதனால் அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு பின் அவர் எந்த அரசியலும் பேசவில்லை. உண்மையிலேயே அவரிடம் போராடும் குணம் இருந்து இருந்தால் போராடி இருப்பார். அரசியலுக்கு வந்தால் அது இருக்க வேண்டும் இப்போதெல்லாம் எப்படி பழி வாங்குகிறார்கள் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement