‘நான் திரும்ப வருவேன் டா’ ஹேட்டர்ஸ்-க்கு ரிப்ளை கொடுத்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா. வீடியோ இதோ.

0
1324
abishek
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்களை கடந்து உள்ளது. கடந்த சீசனை விட இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த முறை நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். வழக்கம் போல பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் கலவரமும் சண்டையும் தொடங்கிவிட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மலேசியா தமிழ் பெண்ணான நதியா சாங் முதலில் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் யூட்யூப் பிரபலம் அபிஷேக் ராஜா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இவர் செய்ததை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் ரசிகர்கள் என பலரும் வறுத்து எடுத்து வந்த நிலையில் கடந்த வாரம் இவர் வெளி ஏறினார். அபிஷேக் ராஜா யூடியூப் பிரபல மட்டுமில்லாமல் சினிமா விமர்சகர் மற்றும் விஜே ஆவார். இவர் ஏராளமான சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். இதனால் இவர் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னே பல பிரச்சினைகளில் சிக்கி பல பேரிடம் வெறுப்பை சம்பாதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போதும் பிறரை பற்றி சர்ச்சையாக பேசுவது மற்றும் தனது பேச்சின் மூலம் மற்றவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்ய நினைப்பது என்று செய்து வந்தார்.

இதையும் பாருங்க : சிம்புவின் தாய், தந்தை மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் – யார் கொடுத்துள்ளது பாருங்க

- Advertisement -

இதனால் இவர் பல பேருடைய வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அபிஷேக் தன்னை வெறுத்தவர்களுக்கு பதில் கூறிய பழைய வீடியோ ஒன்றை தற்போது இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் அபிஷேக் கூறியிருப்பது, என் மீது கூறப்படும் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள், வெறுப்பு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இன்றுவரை என்னை நான் தற்காத்து கொள்ள நினைக்கவில்லை. குறிப்பாக நான் அதை செய்ய விரும்பவுமில்லை. செய்யவும் மாட்டேன். ஆனால், ஒரு தனி மனிதனாக இந்த உலகில் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறேன். என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நான் என் வாழ்வில் சாதிக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is image-114.png

இருந்தாலும் நான் ஒரு விவாதப் பொருளாக மாறுவதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்களை புறக்கணித்து செல்வதுதான் நல்லது. சவால்களை எப்போதும் நான் விரும்புகிறேன். எனக்கு பிடித்ததை நான் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. என்னை பாராட்டி மற்றும் வெறுத்து விமர்சிக்கும் அனைவருக்குமே நன்றி. நான் எப்போதும் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இது இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னாடியே வெளியான வீடியோ தற்போது சூழ்நிலைக்கேற்றவாறு இந்த வீடியோ அமைந்ததால் இதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement