ராஜா ராணியில் இருந்து ஆல்யா விலகப் போகிறாரா ? சஞ்சீவ் கூறிய பதிலால் ரசிகர்கள் சந்தேகம்.

0
8003
raja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள். ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : மாஸ்டர் செஃப் குழு மீது தமன்னா வழக்கு – என்ன காரணம் பாருங்க.

- Advertisement -

இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆய்லா என்ற மகளும் பிறந்தார். திருமணத்திற்கு பின்னர் நடிகர் சஞ்சீவ் ‘காற்றின் மொழி’ தொடரில் நடித்து வருகிறார். அதே போல ஆல்யா மான்ஸா, ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்களது மகள் ‘அய்லா ‘வின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இப்படி ஒரு நிலையில் ல் யா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் கூறிய சஞ்சீவ்,  தனது மனைவி ஆல்யா கர்ப்பமாக உள்ள விஷயத்தை கூறியுள்ளார். அதில் அவர் ஐலா-2 வர உள்ளதாக கூறி தங்களது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement