சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போலிசாரால் கைது செய்ப்பட்டுளளார்.
மேலும், விசாரணையில் அவர் மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்துவந்துள்ளதாக வாக்குமூலமும் அளித்துள்ளார். இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார், ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவியும், பிரபல கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்னர் அவரும் காலமானதை தொடர்ந்து தற்போது இதனை அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதையும் பாருங்க : என் கணவர் என்னை அடித்துவிட்டார், கதறிய பெண் – லைவில் ரம்யா சொன்ன ஆறுதல்.
சமூக ஊடகங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். இதில் ஏற்கனவே பேசிய ஒய் ஜி மகேந்திரன், பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் பள்ளியில் ஒரு டிரஸ்டி மட்டும் தான். எனது தம்பி மனைவியும் தம்பியும் தான் வழி நடத்துகிறார்கள் என்று இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுவந்தி.
ராஜகோபால் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர். அவர் செய்தது மன்னிக்க முடியாத தவறு அதற்கு அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்று தான் புகார் வந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள்.என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது. அவங்க பேருக்கோ, இல்லை இந்த பள்ளியின் மரபுக்கோ எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
அதே போல பேட்டி ஒன்றை அளித்துள்ள மதுவந்தி , அது என்னுடைய பள்ளிதான், ஏனென்றால் நான் அங்கு தான் படித்தேன். ஆனால், அந்த பள்ளியை நானோ என் அப்பாவோ நடத்தவில்லை. நானும் தனியாக ஒரு பள்ளி நடத்தி வந்தேன். இப்போது நடத்தவில்லை. பாஜகவில் முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். எங்களை விமர்சிப்பவர்களுக்கு வேறு வேலை இல்லை. இந்த அறிவுஜீவிகள் இதனை புரிந்துகொண்டால் போதும். அதே போல சாதி, மதத்தை உள்ளே கொண்டு வந்து அரசியல் பேசும் கோமாளிகளை கேள்வி கேட்கத்தான் செய்வேன். இந்தக் கோமாளிகள் அடக்கிக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.