என் கணவர் என்னை அடித்துவிட்டார், கதறிய பெண் – லைவில் ரம்யா சொன்ன ஆறுதல்.

0
788
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

-விளம்பரம்-

பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : இதனாலதா பேட்டி கொடுக்கறது இல்ல – கவுண்டமணி சொன்ன பீடி கதை – தலைவர் அந்த காலத்து தல மாதிரி போல.

- Advertisement -

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரம்யா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அப்போது ரசிகை ஒருவர், என் கணவர் என்னை அடித்துவிட்டார். என் திருமண வாழ்க்கையை முடித்துகொள்ளப்போகிறேன். அணைத்து பெண்களும் உங்களுக்காக வாழுங்கள் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ரம்யா, ரொம்ப சாரி, இது போல துன்புறுத்தல்களை சந்திக்கும் அணைத்து பெண்களுக்கும் என்னுடைய அன்பை கொடுக்கிறேன். நீங்கள் இதனை பற்றி சொன்னதை என்னை பெருமையடைகிறேன். அதே போல, சத்தியமா இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கல. நீங்கள் பாதுகாப்பான நபர்களிடம் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற துன்புறுத்தல்கள் தற்போது அதிகமாக இருந்து வருகிறது. இது போல நானும் சந்தித்து இருக்கிறேன். அதை நீங்கள் எதிர்கொண்டுள்ளேர்கள் என்பதை என்னும் போது வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement