ஒரு தனிப்பட்ட நபருக்காக எங்கள இப்படி பண்ணுவீங்களா? – கீழடி அருங்காட்சியகத்தில் சிவகுமார் குடும்ப விசிட்டால் அவதிப்பட்ட பொதுமக்கள் வாக்குவாதம்.

0
587
- Advertisement -

மேடையில் சமூகநீதி என்று பேசிக்கொண்டு நிஜத்தில் இப்படி எல்லாம் செய்வதா? என்று சூர்யா குடும்பத்தினரை தாக்கி நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி சமீப காலமாக சூர்யா நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது.

- Advertisement -

சூர்யா நடிக்கும் படம்:

இதனை அடுத்து தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். இப்படமானது 3d கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதேபோல் நடிகை ஜோதிகாவும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும், சூர்யா குடும்பத்தினர் மேடைகளிலும், படங்களிலும் சமூக நீதி பேசுவது அனைவரும் அறிந்த ஒன்று. அது மட்டும் இல்லாமல் அவருடைய தந்தையான சிவகுமாரும் சமூக நீதி, மக்களின் நிலைமை என்று பேசுவார். இப்படி இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்களா? என்று நெட்டிசன்கள் விமர்சிக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அருங்காட்சியகம் குறித்த தகவல்:

அதாவது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடி 41 லட்சம் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. இதில் பத்து கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. அதில் ஆறு கட்டடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் எல்லாம் மெகா சைஸ் டிவிகளில் ஒளிபரப்பப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு தளத்திலும் மினியேச்சர் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட குறிப்பிட்ட தேதி வரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

-விளம்பரம்-

அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பம்:

பின் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்கள். அதோடு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த அருங்காட்சியத்தை பார்க்க அனுமதி என்றும் அறிவித்திருந்தார்கள். ஆனால், சனிக்கிழமை மட்டும் அருங்காட்சியகத்தின் விதிமுறை மீறி இருக்கிறது. அதாவது, காலை 9 மணி அளவில் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினருடன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் அருங்காட்சியத்திற்கு வந்திருந்தார்கள். சூர்யா குடும்பத்தினர் வந்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அருங்காட்சியகம் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அருங்காட்சியத்தை பார்வையிட வந்த மாணவர்கள் வெயிலில் கால் கடக்க சில மணி நேரம் காத்து நின்று இருந்தார்கள்.

சூர்யாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதுமட்டுமில்லாமல் காலை 10 மணிக்கு அருங்காட்சியம் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பார்வையிட்டதால் காலை 10. 20 மணி வரை பொதுமக்களும், மாணவர்களும் வெயிலில் காத்திருந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஏன் அருங்காட்சியகம் திறக்கவில்லை? என்ன காரணம் என்று அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பின் சிவகுமார் குடும்பத்தினர் மற்றும் வெங்கடேசன் எம்பி எல்லோரும் காலை 10:30 மணி அளவில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

அதற்கு பின்பு தான் வெயிலில் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளே வரிசையாக அனுமதி இருந்தார்கள். இது குறித்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலரும், மேடைக்கு மேடை, படத்துக்கு படம் தான் இவர்கள் மக்கள் நீதி, சமூக நீதி என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் எல்லாம் கப்ஸா! மாணவர்களும், பொதுமக்களும் வெயிலில் கால்கடுக்க நின்றிருந்த நிலையில் இவர்கள் செய்திருப்பது நியாயமா? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement