நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே – குமுறும் மாஸ்டர் பட பிரபலம்.

0
584

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர்கள் தான் நாகூரான்-செல்வி தம்பதியர். இவர்களுடைய 7 வயது மகள் தான் ஜெயப்பிரியா. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜெயப்பிரியா திடீரென காணவில்லை. அதனால் பதறிபோன பெற்றோர் சொந்தக்காரர் வீடுகளுக்கு சென்று தேட ஆரம்பித்தனர். ஆனால், சிறுமி கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் ஏம்பல் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை எனப் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். பின் இவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்தது.

சிறுமி உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. குறிப்பாக தொடைப்பகுதியில் நிறைய காயங்கள் இருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் போஸ்ட் மார்ட்டத்துக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஜெயப்பிரியாவை 3 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும், பிறகு அடித்தே ஜெயப்பிரியாவை கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை போலீஸ் கைது செய்து உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மீண்டும் தமிழகம் முழுவதும் புரட்சி வெடிக்க தொடங்கி உள்ளது.

இதையும் பாருங்க : சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த செம்பருத்தி சீரியல் நடிகர் – இவங்க தான் பொண்ணு.

- Advertisement -

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தயாரிப்பாளரும், மாஸ்டர் படம் பிரபலம் ஆன ரத்தினகுமார் அவர்கள் உணர்ச்சிபூர்வமான டீவ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அந்த குழந்த முக கவசம் எல்லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய் கெடுத்து கொன்னுட்டீங்களே டா. இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது என்று உருக்கமான பதிவு பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

Vijay Sethupathi kisses Rathna Kumar at Master audio launch | Tamil Movie  News - Times of India

இதேபோல் சமீபத்தில் 26 வயதான பிரியங்கா என்பவரை கற்பழித்து கொலை செய்த வழக்கிற்கு ஹைதராபாத்தில் கொடூரமான தண்டனை உடனடியாக வழங்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரி கேடுகெட்ட வேலை செய்யும் வெறி நாய்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் தான் நாட்டில் இந்த தவறுகள் நிகழாமல் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் இயக்குநரும், எழுத்தாளருமானவர் ரத்தினகுமார். இவர் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் பணி புரிந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement