விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.
அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் நிகழ்ச்சி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது.
குக் வித் கோமாளி 4 :
இந்நிலையில் இந்த சீசன் முதல் எலிமினேஷன் முதல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதலில் வைத்த சுற்றில் சிவாங்கி சமையலில் அசத்தி செப் ஆப் தி வீக் என்ற படத்தை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து முதல் சுற்றில் சுமாராக சமைத்த காளையன், ஷெரின், கிஷோர் ஆகிய மூவரும் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றானர். இதில் சுமாராக சமைத்த கிஷோர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
கிஷோர் பதிவு :
இப்படி ஒரு நிலையில் ஷிவாங்கிக்கு பதில் தன்னை வெளியேற்றிவிட்டதாகவும் thumbnail வைத்து யூடுயூப் சேனல் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த இயக்குனர் கிஷோர் நான் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை. இந்த thumbnail, செய்தி அனைத்தும் பொய். தயவு செய்து இந்த பொய்யான செய்தியை நீக்குங்கள் என்றும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் வரையில் எந்த பேட்டியும் கொடுக்க கூடாது என்று சேனல் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போட்டியாளர்களுடம் ஒப்பந்தம் :
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நிகழ்ச்சி பற்றியோ அல்லது அங்கு நடக்கும் விஷியம் பற்றியோ ஏதும் வெளியில் சொல்லக்கூடாது என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரையில் எந்த பேட்டியும் கொடுக்க கூடாது என்றும் ஒப்பம்தாம் போடுவார்கள். கடந்த சீசனில் கூட பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளன தனலட்சிமி மற்றும் டைட்டில் வின்னர் அசீம் என இருவரும் 2 வாரங்கள் கழித்தே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். அதோடு பிக் பாஸ் வீட்டில் சிலரை நிகழ்ச்சியே திட்டமிட்டு வெளியிற்றுவதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர்.
ஷிவாங்கிக்கு உதவி செய்கிறதா விஜய் டிவி? :
இந்த நிலையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் இருந்து மூன்று சீசன்கள் வரை சமையல் பொருட்களின் பெயர் கூட தெரியாதமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் செஃப்பாக வந்ததோடு இல்லாமல் கடந்த வாரம் செஃப் ஆப் தி வீக் வாங்கியது தான் மிகப்பெரிய ஆச்சரியமே. அதே போல ஷிவாங்கியின் சமையலுக்கு மார்க் போடும் போது அவரை பாட வைத்து அவரது பாடும் திறன் மூலம் ஷிவாங்கியை ஒரு நல்ல போட்டியாளராக மக்கள் மத்தியில் காட்ட முயற்சி செய்கிறதா விஜய் டிவி என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.