வீட்டுக்கே வந்து 6 இடத்துல என்ன வெட்னான் – கடைசி விவசாயி பட நடிகை ரேச்சல் வாழ்வில் நடத்த கொடூரமான சம்பவம்.

0
1317
- Advertisement -

ஒரு தலை காதலால் நான் சாவின் விளிம்பு வரை சென்று விட்டேன் என்று நடிகை ரேச்சல் ரெபெக்கா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் ரேச்சல் ரெபெக்கா. இவர் நடிகை மட்டும் இல்லாமல் தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர் என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் வேலூரை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஆயுர்வேதத்தில் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அவருடைய அம்மா கடைப்பிடித்த ஆரோக்கியமான மருத்துவ பழக்கம்தான்.
இதனால் இவர் சென்னையில் இளநிலை ஆயுர்வேதம் படித்தார். பின்னர் பெங்களூரில் முதுகலை படித்தார். தற்போது ரேச்சல் ரெபெக்கா ஆயுர்வேதம் மருத்துவராக இருக்கிறார். இப்படி இவர் ஆயுர்வேத மருத்துவராக இருந்தாலும் நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

- Advertisement -

ரேச்சல் ரெபெக்கா குறித்த தகவல்:

இதனால் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படை வெல்லும் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ரேச்சல் ரெபெக்கா நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கடைசி விவசாயி. நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருந்தார்.

ரேச்சல் ரெபெக்கா அளித்த பேட்டி:

இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசியாக ரேச்சல் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று இருந்தார்கள். அதோடு பிரபலங்கள் பலரும் இவரை பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து ரேச்சல் ரெபெக்கா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேச்சல் ரெபெக்கா தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு குறித்து சொன்னது, ஒரு நாள் எங்களுடைய வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள்.

-விளம்பரம்-

கசப்பான நிகழ்வு:

பிறகு பார்த்தால் என்னை இரண்டு, மூன்று வருடங்களாக காதல் செய்யா சொல்லி டார்ச்சர் செய்த நபர் இருந்தார். நான் பதட்டத்தில் அமைதியாக என்ன? யார் வேண்டும்? என்று கேட்டேன். உடனே அவர், என் கையில் இருந்த போனை பிடிங்கி எடுத்துக்கொண்டு போன் வேண்டும் என்றால் என்னை பார்க்க பஸ் ஸ்டாண்டுக்கு வா என்று சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அடுத்த நாள் வீட்டில் என்னுடன் அம்மாவும் இருந்தார்.

வாழ்கை பாடம்:

அவன் மீண்டும் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய மண்டையில் ஒரு வெட்டு, தோள்பட்டை கழுத்தில் வயிற்றில் எல்லாம் கத்தியால் குத்தி சென்று விட்டான். ரத்தம் நிறைய போனது. அப்போது நாம் சாகக்கூடாது, ஏன் சாகவேண்டும்? வாழவேண்டும் என்று எண்ணம் வந்தது. உயிர் மேலே எனக்கு ஆசை இல்லை. வாழனும் என்று ஆசைப்பட்டேன். அது தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பெஸ்ட் இன்சிடென்ட் என்று சொல்லுவேன். வாழ்க்கை என்பது எதிர்பாராத மேஜிக்கை நிகழ்த்தும். அந்த மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையிலும் நிகழ்த்திருக்கிறது எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement