விஜய்யின்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி ! அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்

0
854

இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ் இயங்கிவரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் என்று மட்டுமே செய்திகள் வெளியாகின.ஆனால் இந்த படத்தின் கதை என்ன,விஜய் எப்படிபட்ட காதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எந்த ஒரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடாமல் ரகசியம் காத்துவந்த நிலையில், இந்த படத்தில் நடித்த ராதாரவி படத்தை பற்றிய ஒரு சில தகவல்களை பேட்டி ஒன்றில் உலறிவிட்டார்.

radharavi

சமீபத்தில் பேட்டியளித்த ராதாரவி இந்த படத்தை பற்றி கூறுகையில் இந்த படத்தில் நான் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளேன்.மேலும் அரசியல்வாதியாக நடித்துள்ள தனக்கும் விஜய்க்கும் இந்த படத்தில் அடிக்கடி போட்டி சண்டை வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.அதில் அவர் என்னை மீறி வருவர்”என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு அரசியல் சம்மந்தபட்ட சில வசனங்களும் ,காட்சிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது என்று நமது பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் தற்போது ராதாரவி கூறியுள்ளதை வைத்துபார்க்கும் போது இந்த படத்தின் கதை அரசியல் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய் அரசியலுக்கு வருதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.