தனது அரசி சீரியலில் நடித்த நடிகையின் கடை பிரான்சை திறந்து வைத்த ராதிகா.

0
897
radhika
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.

-விளம்பரம்-

இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த அரசி சீரியலில் நடித்த சீரியல் நடிகையின் கடையை திறந்து வைத்துள்ளார் ராதிகா. சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரையிலேயே பயணம் செய்த நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் . மேலும்,நாடக நடிகை பூர்ணிமாவின் மகள் தான் நடிகை சந்தோஷி. மேலும்,நடிகை சந்தோஷி தன்னுடைய எட்டு வயது இருக்கும் போதே தன்னுடைய அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதையும் பாருங்க : குழந்தை பிறக்கப்போகும் மாதத்தோடு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஒஸ்தி பட நடிகை.

- Advertisement -

அதன் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும்,இவர் பாபா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சந்தோஷி அவர்கள் நிறைய பியூட்டி(அழகு) போட்டிகள் கூட செய்கிறார்கள்.

மேலும், இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக தற்போது வைத்து உள்ளார். மேலும்,இவர் சமீப காலமாகவே சீரியலில் காண முடியவில்லை. ஆனால், சந்தோஷி plush என்ற பொட்டிக் கடைகளை நிறுவி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சென்னையில் புதிய பிரான்ச் ஒன்றை திறந்துள்ளார். அதனை நடிகை ராதிகா திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டும் இவரது பொட்டிக் கடையை ராதிகா தான் திறந்து வைத்தாராம்.

-விளம்பரம்-

Advertisement