ரஜினியால் முடிவுக்கு வந்த 4 வருட சண்டை – சீமானுக்கு சமானதான புறா விட்ட லாரன்ஸ்

0
786
Seeman
- Advertisement -

சீமான்- ராகவா லாரன்ஸ் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரஜினி குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் பயங்கரமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே செய்யாத சாதனையை ஜெயிலர் படம் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இதனை அடுத்து ரஜினி குறித்த செய்திகள் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் விவகாரத்தில் நாம் தமிழர் சீமானுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை தான் வெளியாகி இருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தர்பார். இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விமர்சித்து பேசி இருந்தார்.

- Advertisement -

சீமான்-லாரன்ஸ் சர்ச்சை:

அதோடு சீமான் சில ஆண்டுகளாகவே ரஜினியை விமர்சித்து ஏதாவது ஒரு சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்தார். இதனால் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் சீமானை விமர்சித்து பேசி இருந்தார். இதனால் நாம் தமிழர் கட்சி சீமானுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இதன்பின் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் சீமானை குறித்து கடுமையாக விமர்சனங்களை கொடுத்து வந்திருந்தார்.

ரஜினி குறித்து சீமான் சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியிருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைகளை எழுப்பி இருந்தது. இது குறித்து பலருமே ரஜினிகாந்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், சீமான் அவர்கள் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி இமயமலை செல்கிறார். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது அவருடைய சொந்த விருப்பம். அவரை யாரும் தொல்லை செய்யக்கூடாது.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் பதிவு:

தேவையில்லாமல் சர்ச்சைகளை பரப்பாதீர்கள். ரஜினிகாந்த் அவர்கள் காலில் விழுந்து விட்டதாலே வெங்காய விலை ஏறி விட்டதா? என்று அவருக்கு ஆதரவாக பேசி இருந்தார். இப்படி சீமான் பேசியிருந்த வீடியோ தான் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அண்ணன் சீமானுக்கு நன்றிகள். ரஜினிகாந்துக்கு எதிராக சீமான் பேசியதால் தான் நானும் தங்களுக்கு எதிராக பேசியிருந்தேன். தற்போது நீங்கள் ரஜினிக்கு ஆதரவாக பேசி இருக்கிறீர்கள். அதனால் நானும் உங்களை அன்புடன் நேரில் சந்திக்க வருகிறேன். அண்ணன் சீமானுக்கு மீண்டும் என்னுடைய நன்றி என்று கூறியிருந்தார்.

சந்திரமுகி 2 படம்:

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

Advertisement