உனக்கு நான் செஞ்சேன் இவனுக்கு நீ செய் – 20வருடங்களாக தான் படிக்க வைத்த இளைஞனிடம் அடுத்த விதையை ஒப்படைத்த லாரன்ஸ்.

0
415
Lawrence
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் திரைப்பயணம்:

இதனை அடுத்து கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து லாரன்ஸ் அவர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்.

லாரன்ஸின் சமூக சேவை:

இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம், உங்களால் முடிந்தவர்களுக்கு நீங்களே உதவி செய்யுங்கள் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் டிகிரி முடித்திருக்கும் இளைஞர் ஒருவரை ராகவா லாரன்ஸ் அறிமுகப்படுத்தி சந்தோஷ் உடன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வார்த்தைக்கு விட செயல்தான் அதிகமாக பேசும். சிவசக்தி என்ற இளைஞர் புதுக்கோட்டை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இளைஞர் குறித்து சொன்னது:

அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அவருடைய அம்மா என்னிடம் உதவி கேட்டு வந்தார். அவருடைய தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டார். பின் சிவசக்தியும் அவருடைய சகோதரியையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவருடைய தாய் என்னிடம் உதவி கேட்டார். அவர்கள் இருவருமே என்னுடைய வீட்டில் தான் வளர்ந்தார்கள். என்னுடைய ஆதரவுடன் சிவசக்தி தற்போது கணிதத்தில் பி எஸ் சி முடித்துவிட்டு தனியார் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார். சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்று தன்னுடைய கனவை நோக்கி அவர் உழைத்தே வருகிறார். சிவசக்தியும் மற்றவர்களுக்கும் உதவ நினைப்பார். கல்விதான் உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம். சேவையே கடவுள்.

வைரலாகும் வீடியோ:

இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். என்னுடைய 20 ஆண்டுகால கனவு இன்று நினைவாகி இருக்கிறது. இவர் சின்ன வயதில் குட்டியாக என்னிடம் ஓடி வந்தார். நான் போட்ட விதை இப்போது மரமாக நிற்கிறது. இந்த இரண்டு குழந்தைகள் தொடங்கி இப்போது 60 குழந்தைகள் வரை வளர்ந்து வரிசையாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்கு வீட்டை விட்டு விட்டு நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு சென்று விட்டோம். அப்போது வீட்டை கொடுக்கும் போது கஷ்டமாக இருந்தது. ஆனால், இவர்கள் வளர்ந்து வரும் போது அந்த கஷ்டமெல்லாம் போய்விட்டது. இதே மாதிரி இவர் சேவை செய்ய வருகிறார் என்று பேசி இருக்கிறார். பின் அந்த வீடியோ கடைசியில் கே பி ஒய் பாலாவும், சந்தோஷத்தில் ராகவா லாரன்ஸ் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். ராகவா லாரன்ஸின் நல்ல மனதை பாராட்டி ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement