10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ரஹ்மான் தரப்பு நோட்டீஸ் – யார் மீது தெரியுமா ? பின்னணி இதோ.

0
1788
- Advertisement -

தன் பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் செயல் பட்டதாக ரஹ்மான் அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் அளித்திருக்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018ல் ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இதற்காக 29.50 லட்சம் ரூபாய் முன்பணமாக ஏ ஆர் ரகுமானுக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால், அப்போது இருந்த அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை. இதனால் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏ ஆர் ரகுமானிடம் கொடுத்த முன் பணத்தொகையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து காசோலையாக திருப்பித் தந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் மீது புகார்:

ஆனால், அந்த காசோலை வங்கியில் பவுன்ஸ் ஆகி இருக்கிறது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகி செந்தில் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ ஆர் ரகுமான் மீது புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ரஹ்மான் தொடுத்த வழக்கு

இந்த வாய்ப்பு தொடர்பாக இசையமைப்பாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில் இசை துறையில் பல்வேறு விருதுகள் பெற்று மதிப்பு மிக்க நபராக ஏ ஆர் ரகுமான் இருந்து வந்து வருகிறார். சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார். அவரைப் பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக உள்ளது. ASICON அமைப்பு எ ஆர் ரகுமான் எந்த விதத்திலும் தொடர்பிலும் ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில் மலிவான விளம்பதிற்காக இதுபோன்ற குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.

-விளம்பரம்-

தனக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணத்தை நான் பெறவில்லை என ரகுமான் கூறுகிறார். மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்தியர்கள் சிகிச்சை நிபுணர் சங்கம் தேவையில்லாமல் ரகுமானின் பெயரைக் கொடுத்து வருகிறது. ரகுமானுக்கு அனுப்பிய நோட்டீசை மூன்று நாட்கள் திரும்ப பெற வேண்டும் பெயருக்கு வழங்கும் ஏற்படுத்தியதாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ ஆர் ரகுமான் சமூகத்தின் நற்பெயருக்கு ஏற்பாட்டு பாதிப்பிற்காக ரூபாய் பத்து கோடி இழப்பிடாக தரவேண்டும் தவறினால் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் ஒன்று அனுப்பி வைத்தார்.

Advertisement