ராஜா கைய வச்சா பாடலை பாடியுள்ள SPB – ரெக்கார்டிங் செய்துவிட்டு படத்தில் வைக்காத கமல். இதோ அந்த ஒரிஜினல் வெர்ஷன்

0
1484
- Advertisement -

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வெச்சா பாடலை எஸ் பி பி பாடி இருக்கும் பாடல் வைரலாகி வருகிறது. இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம் .

-விளம்பரம்-

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதோடு இவர் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றின் காரணமாக எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.

- Advertisement -

எஸ் பி பியின் இறப்பு :

மேலும், எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று எஸ் பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள். அவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை இதில் பாப்போம்

ராஜா கைய வச்சா பாடல் :

எனக்குள் ஒருவன் படத்தில் இடம்பெற்ற மேகம் கொட்டட்டும் பாடலையும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா பாடலையும் கமல் மற்றும் எஸ் பி பி ஆகிய இருவருமே பாடி இருக்கிறார்கள். ஆனால், எனக்குள் ஒருவன் படத்தின் மேகம் கொட்டட்டும் பாடலை எஸ் பி பி குரலில் பாடிய பாடலையே தேர்வு செய்தார் கமல். ஆனால், ராஜா கைய வச்சா பாடலை தன்னுடைய குரலில் பாடியதை தான் கமல் வைத்தார்.

-விளம்பரம்-

மேகம் கொட்டட்டும் பாடலை கமல் குரலில் பாடப்பட்ட பாடலும், எஸ் பி பி குரலில் பாடப்பட்ட அண்ணாத்த ஆடுறார் பாடலின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. ‘ராஜா கைய வச்சா’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், உண்மையில் அந்தப் பாடலுக்கு பதில் ‘அட உங்க அம்மா வா பார்த்த காலைத் தொட்டுக் கும்பிடுவேன்’ என்ற பாடல் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை காந்திமதி அவர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை.

அபூர்வ சகோதரர்கள் படம்:

அதே போல் நடிகை காந்திமதி அவர்களும் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு அம்மாவாக மனோரமா நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்றாலும், இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் ஒளிபரப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பல படங்களுக்கு எஸ்பிபி இசையமைத்திருக்கிறார். அந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement