ராஜா ராணி பட காட்சியை சுட்ட சன் டிவி சீரியல். அதுவும் இந்த சீரியல்ல போய் இப்படி பண்ணி இருக்காங்க.

0
58669

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் வெள்ளித்திரையில் ஒளிப்பரப்பாகும் படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனாலேயே தற்போது ஒவ்வொரு சேனலிலும் புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் 90ஸ்களில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாமல் இருக்கிறது. அந்த வகையில் சித்தி தொடரும் ஒன்று

பிரபல நடிகையான ராதிகா சரத்குமார், சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி கண்ணின் மணி கண்ணின்மணி என தொடங்கும் பாடலும் அனைத்து இல்லத்தரசியின் வீட்டையும் ஆக்கிரமித்து இருந்தது இந்த தொடர்.

- Advertisement -

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான இந்த தொடரின் எபொசிடில் ஆக்சிடண்ட் காட்சி ஒன்றும் இடம்பெற்றது.

வீடியோவில் 4 : 08 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த காட்சி அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் வந்த காட்சி போலவே இருந்தது. அந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகை நஸ்ரியா, கார் விபத்தில் இறந்து விடுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இதே போன்ற காட்சி தான் சித்தி 2 தொடரிலும் இடம் பெற்றுள்ளது. பொதுவாக அட்லீ தான் பல படத்தில் இருந்து சுடுவார் ஆனால், தற்போது அட்லீ படத்தையே சுட்டிருக்காங்கலே பாஸ்.

Advertisement