ராஜா ராணியில் நஸ்ரியாவை காதலிக்கும் போதே தனது வருங்கால மனைவி நயன்தாராவை பார்த்துள்ள ஆர்யா.

0
9794
raja
- Advertisement -

சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.இயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

-விளம்பரம்-

மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது.இதை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை இயக்கி இருந்தார்.அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : சுனைனாவா இப்படி கிளாமர் உடையில் – வைரலாகும் அவரின் Throwback புகைப்படம்.

- Advertisement -

ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. அட்லீ படத்தில் இடம்பெற்ற எத்தனையோ காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுட்டதுதான் என்று நெட்டிசன்கள் பல ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் இன்சிபேரேஷன் என்று அசால்ட்டாக கூறிவிட்டு சென்று விடுகிறார்.

இப்படி ஒரு நிலையில் இவர் இயக்கிய ராஜா ராணி படத்தின் ஒரு மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக்கையே செய்துள்ளார் அட்லீ. இந்த படத்தின் ஆர்யா மற்றும் நஸ்ரியாவின் பிளாஷ் பேக் காட்சியில் ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் படம் பார்க்க தியேட்டருக்கு சென்று இருப்பார்கள் அப்போது அங்கு சிவாஜி படம் ஓடிக்கொண்டு இருக்கும். இந்த படத்தின் முதல் பாடலில் நயந்தாரா ஆடி இருப்பார். அப்படி பார்த்தல் வருங்கால மனைவியையே ஆர்யா திரையில் பார்த்து இருப்பார்.

-விளம்பரம்-
Advertisement