உங்களுக்கு வெக்காமவே இல்லையா – சஞ்சீவ் மானசாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
101100
sanjeev

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகளும் நிஜ வாழ்க்கையில் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி சீரியலில் காதலர்களாக வலம் வந்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ராஜா ராணி சீரியல் மூலம் ஆலியா மானசா, சஞ்சீவ் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதிலும் பெரும் வரவேற்பை பெற்றார்கள்.

திருமணத்திற்கு பின்னர் சிறிது காலம் பிரேக் எடுத்த சஞ்சீவ், விஜய் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற தொடரில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார். ஆனால் ஆலியா மானசா இன்னும் எந்த சீரியலிலும் நடிக்க துவங்கிவில்லை. இருப்பினும் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொடரில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கூட வெளியானது. அந்தத் தொடரை ராஜா ராணி தொடரை இயக்கிய இயக்குனர்தான் இயக்க இருக்கிறாராம்.

- Advertisement -

இருப்பினும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா இருவரும் அடிக்கடி ஏதாவது ஒரு பொருட்களில் விளம்பரத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்களாம் பக்கத்தில் இவர்களை பல லட்சம் பேர் பகிர்ந்து வரும் நிலையில் இவர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு பொருளை விளம்பரப்படுத்தி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு பணமும் கிடைக்கிறது சீரியல் நடிகர்களிலேயே Bmw கார் வைத்திருக்கும் நடிகர்களில் இந்த இளம் ஜோடிகள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர்கள் அடிக்கடி பொருட்களை விளம்பரம் செய்வதை பார்த்து கடுப்பான இவரது ரசிகர்கள் எத்தனை பொருளைத்தான் விளம்பரம் செய்வீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது எல்லாம் தேவைதானா என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement