படத்தில் பாடியும் இடம்பெறாத தன்னுடைய பெயர், வாரிசு Audio Launchக்கு அழைத்தும் செல்லாத ராஜலக்ஷ்மி. அதற்கு அவர் சொன்ன காரணம்.

0
768
varisu
- Advertisement -

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இருக்கிறது. ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் வா தலைவா பாடலில் வரும் முதல் சிறு வரிகளை ராஜலக்ஷி பாடி இருக்கிறார் அனால், அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய அவர் ‘இந்த படத்தில் முதலில் ரப் ராக் பாடத்தான் என்னை அழைத்து இருந்தார்கள். நானும் சென்று பாடி கொடுத்துவிட்டு வந்து விட்டேன். ஆனால், அதன் பின்னர் எனக்கு அழைப்பு வரவே இல்லை. நானும் அவ்வளவு தான் நாம் பாடிய பாடல் வராது என்று நினைத்துவிட்டேன். பின்னர் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு நாள் முன்பு இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் மேடையில் பாட வேண்டும் என்று அழைத்தார்கள்.

- Advertisement -

ஆனால், என்னை யாரோ போன் செய்து கலாய்க்கிறார்கள் என்று நினைத்தேன். மேலும், அந்த சமயத்தில் எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் பார்த்தால் நிஜமாகவே நான் பாடிய பாடல் இசை வெளியீட்டு விழாவில் இடம் பெற்று இருந்தது. அதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இசை வெளியீட்டு விழாவிற்கு நாம் செல்ல முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன்’ என்று கூறியுள்ளார். அதேபோல வா தலைவா பாடலில் உங்களின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று கேட்கப்பட்டதற்கு பதில் கூறிய ராஜலட்சுமி அவர்கள் மறந்து கூட இருக்கலாம் இந்த படத்தில் நான் ரெக்கார்டிங் சென்ற போது எனக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் ஒருவேளை படத்தில் என் பெயர் இடம் பெற்று இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்

ஏற்கனவே ராஜலட்சுமி விருமன் படத்தில் பாடிய பாடல் படக்குழுவினர் நீக்கிவிட்டு பின்னர் அதே பாடலை பின்னர் அதிதி ஷங்கர் பாடி இருந்தார். இதுகுறித்து பேசிய ராஜலக்ஷ்மி ‘மதுரவீரன் பாட்டை நான் பாடினது உண்மை தான்.ஒரு மாதத்திற்கு முன்பே யுவன் சார் அலுவலகத்தில் இருந்து கால் வந்தது. யுவன் சார் இசையில் பாடுவது என்பது ஒரு மிகப்பெரிய வரம். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நான் போய் பாடி கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், நான் பாடின பாட்டு இப்ப அதிதி குரலில் வெளியாகி இருக்கு.

-விளம்பரம்-

எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டை ரெக்கார்டிங் பண்ணும் போது நிறைய பாடகர்களை பாடவைத்து பார்ப்பார்கள். இது இயல்பாகவே நடக்கும் விஷயம். பாட்டை பாடின எல்லா குரலுமே வெளியே வரனும் என்ற அவசியம் இல்லை.அந்த கதைக்கு அந்தப் பாடலுக்கு யாருடைய குரல் பொருத்தமாக இருக்குமோ அவர்களை தான் தேர்வு செய்வார்கள். இப்படி ரொம்ப யதார்த்தமாக நடக்கிற விஷயத்தை பெரிது பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

அந்தக் கதைக்கும் பாட்டுக்கும் என் குரல் செட் ஆகுமா? இல்லையா? என்று இசையமைப்பாளர் தான் முடிவு பண்ணனும். அதற்கு பிறகு தான் என்னுடைய குரல் வெளியில் வரும். மதுரைவீரன் பாட்டு நல்லா இருந்து இருக்கலாம். ஆனால், என்னுடைய குரல் செட் ஆகாமல் போயிருக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு காரணத்தினால் தான் என் பாட்டு ரிஜெக்ட் ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதிதி மதுரவீரன் பாட்டு ரொம்ப சூப்பராக பாடி இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

Advertisement