வேற லெவல் சம்பவம் Loading – ஒன்றல்ல இரண்டல்ல மகாபாரத கதையை இத்தனை பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள ராஜமௌலி

0
481
Rajamouli
- Advertisement -

இயக்குனர் ராஜா மவுலி இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவன் முதன் முதலில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது மாவீரன் படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் நான் ஈ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான்.

- Advertisement -

பாகுபலி படம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும்.

RRR படம்:

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ராஜமவுலி ஒரு வரலாற்று, புராணங்களை இந்த காலத்திற்கு ஏற்ப படங்களாக எடுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதுக்கேற்றவாறு தற்போது ராஜமவுலி அவர்கள் மகாபாரத கதையை 10 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே பல தொலைக்காட்சிகளில் மகாபாரத கதையை ஒளிபரப்பப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்து ஒன்று.

-விளம்பரம்-

மகாபாரத கதை படம்:

இருந்தாலும், பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ராஜமவுலி அவர்கள் இதை புதுவிதமாக தற்போது இருக்கும் சிஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு ஏற்கனவே ராஜமவுலி பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், மகாபாரதத்திற்கு நான் எழுதும் கதாபாத்திரங்கள் நீங்கள் முன்பு பார்த்தது, படித்தது போல் இருக்காது.

கதாபாத்திரங்கள் யார் :

ஆனால், கதையில் மாற்றமும் இருக்காது. மேம்படுத்தப்படும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படுத்தப்படும் மகாபாரதத்தை என்னுடைய பாதையில் எடுப்பேன். இதில் யார் யார் எந்த கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற பட்டியலை மக்கள் உருவாக்கி உள்ளனர் என்பது எனக்கு தெரியும். ஆனால், மகாபாரதத்தின் திரைகதையை நான் எழுதிய பிறகு என்னுடைய கதாபாத்திரங்களை முடிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

ராஜமௌலி அளித்த பேட்டி:

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சமீபத்தில் ராஜமௌலி அவர்கள் பேட்டியில் கூறியிருந்தது, நான் மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டால் நாட்டில் கிடைக்கும் மகாபாரதத்தின் பல பதிப்புகளை படிக்க வேண்டும். அதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். தற்போது இது 10 பாகங்களாக கொண்ட படமாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அதனால் முழுமையாக படித்த பிறகு இந்த கதையை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement