நடிகை தேவதர்ஷினியை தமிழ் சினிமா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
தி கேரளா ஸ்டோரி படம்:
அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படம் குறித்த சர்ச்சை:
இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் நடிகை தேவதர்ஷினியை தமிழ் சினிமா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தேவதர்ஷினி குறித்த தகவல்:
இந்த படத்தில் கதாநாயகி அதா சர்மாவின் அம்மாவாக தேவதர்ஷினி நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவதர்ஷினி. இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியலிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் சேத்தனின் மனைவி தான் தேவதர்ஷினி. சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் சேத்தன் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.
You too Devadarshini https://t.co/3qELzillTC pic.twitter.com/ePAnf1JyFW
— 991st Lord Commander (@vetrijedi) May 9, 2023
தேவதர்ஷினி கணவரை விமர்சித்த நெட்டிசன்கள்:
இதனால் சேத்தனை பலரும் விமர்சித்து திட்டி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் தியேட்டர்களிலேயே சேத்தனை பலரும் அடித்ததாக நடிகை தேவதர்ஷினி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், தற்போது சேத்தனை விட அவருடைய மனைவி தேவதர்ஷினி மிஞ்சு விட்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். காரணம், தி கேரள ஸ்டோரி படத்தில் தேவதர்ஷினி நடித்தது மட்டும் இல்லாமல் அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேவதர்ஷினி புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு இருக்கிறார்.
தேவதர்ஷினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
இதற்காக நெட்டிசன்கள் பலரும் தேவதர்ஷினியை சரமாரியாக விளாசி திட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர், இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு தான் நடிக்க ஒத்துக் கொண்டீர்களா? இனிமேலாவது கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடியுங்கள்? உங்களுக்கு வேற நல்ல படமே கிடைக்கவில்லையா? இப்படி ஒரு வொர்ஸ்ட் ஆன மதவெறியை தூண்டும் படத்தில் நடித்துவிட்டு போஸ்ட் வர போடுறீங்களே வெட்கமே இல்லையா? என்றெல்லாம் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர். அதோடு இந்த படத்திற்கு முன்னே தமிழர்கள் மற்றும் ஈழ தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தீ ஃபேமிலி மேன் 2 ஸ்டோரி வெப் சீரிஸிலும் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கணவனும், மனைவியும் நடிப்புக்காக மோசமான கதாபாத்திரங்களில் நடிப்பதா? என்றும் கூறி வருகிறார்கள்.